»   »  விந்தியாவைக் காணோம்? நமீதா வருவாங்களா? ஆள் பிடிக்கும் அதிமுக!!

விந்தியாவைக் காணோம்? நமீதா வருவாங்களா? ஆள் பிடிக்கும் அதிமுக!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவின் பெரிய பலமே நட்சத்திர பேச்சாளர்கள்தான். ஆனால் ஆர்கே நகர் தேர்தலில் அதுவும் கைகொடுக்காது என்கிறார்கள்.

கட்சியின் முக்கிய நட்சத்திர பேச்சாளர்கள் எல்லாம் ஓபிஎஸ் அணி பக்கம் சென்றுவிட்டார்கள். கடந்த வாரம் திரையுலகைச் சேர்ந்த சில பேச்சாளர்களை அழைத்து பேசியிருக்கிறார் தினகரன். அவரை சந்தித்துவிட்டு திரும்பியவர்கள் கூட அவருக்கு ஆதரவாக பேசவில்லை. 'கட்சிக்காகத்தான் இன்னும் நீடிக்கிறோம். எங்களுக்கு எந்த விதமான பொறுப்புகளோ பதவிகளோ வழங்கப்படுவதில்லை. தேர்தல்களுக்கு மட்டும் எங்களைப் பயன்படுத்துவிட்டு தேர்தல் முடிந்ததும் கழட்டி விட்டுவிடுகிறார்கள். கட்சி முத்திரையால் சினிமா வாய்ப்பும் இல்லாமல் தவிக்கிறோம்' என்று புலம்பியிருக்கிறார்கள். அவர்களைச் சமாதானப்படுத்த உடனடியாக ஒரு தொகை வழங்கப்பட்டிருக்கிறது. அதையும் சிலர் வாங்க மறுத்துவிட்டனராம்.

AIADMK struggles unavailability of star speakers

கடந்த தேர்தல்களில் பிரசார பீரங்கியாக விளங்கிய விந்தியா ஆள் அட்ரஸே இல்லாமல் இருக்கிறார். விந்தியாவை கட்சிக்குள் கொண்டு வந்த முக்கிய நபரே ஒதுக்கப்பட்டுவிட்டதால் விந்தியாவும் ஒதுங்கி விட்டாராம். விந்தியாவை மீண்டும் அழைத்து வர கட்சி மேலிடம் விரும்புகிறது. ஆனால் விந்தியா நாட் ரீச்சபிள் ஆகிவிட்டார்.

கடந்த தேர்தலின் போது அழைக்கப்படாத நமீதா பக்கம் கவனம் திரும்பியிருக்கிறது. இந்த முறை அழைத்தாலும் தினகரனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வாரா என்பது சந்தேகம்தான்.

எப்படியாவது ஸ்டார் பேச்சாளர் வேண்டும் என்று சில பிரபலங்களுக்கு ஆசை காட்டி வருகிறார்கள் அதிமுக மேலிட நிர்வாகிகள்.

English summary
In RK Nagar by election, TTV Dinakaran faction of AIADMK is struggling unavailablity of star speakers

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil