»   »  "சூப்பர் ஸ்டார்" போல பறங்க.. "கபாலி பிரியாணி"யும் சாப்பிடுங்க... ஏர் ஏசியா அதிரடி!

"சூப்பர் ஸ்டார்" போல பறங்க.. "கபாலி பிரியாணி"யும் சாப்பிடுங்க... ஏர் ஏசியா அதிரடி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஏர் ஏசியா நிறுவனம் இந்தியா முழுவதும் குறைந்த கட்டணத்திலான சிறப்புச் சலுகை ஒன்றை அறிவித்திருக்கிறது. கபாலி பட சிறப்பு சலுகையாகும் இது. அதேபோல சென்னையிலிருந்து மலேசியா செல்லும் விமானத்தில் கபாலி பிரியாணியையும் அது அறிமுகப்படுத்தியுள்ளது.

ஜூலை மாதம் வெளியாகும் ரஜினியின் கபாலி படத்திற்கான எதிர்பார்ப்பு உலகளவில் ஏகத்திற்கும் எகிறிக் கிடக்கிறது. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிந்து விட்டதால் விரைவில் படத்தை சென்சாருக்கு அனுப்ப படக்குழு திட்டமிட்டுள்ளது.


AirAsia Announced ‘Fly like a Superstar’ sale

இந்நிலையில் ஏர் ஏசியா நிறுவனம் கபாலியை வைத்து களத்தில் குதித்துள்ளது. ஏற்கனவே ரூ. 7860 கட்டணத்தில் ஒரு சலுகை விலை பேக்கைஜை அது அறிமுகப்படுத்தியது . அது, கபாலி படத்தின் முதல் நாள் முதல் காட்சி பார்க்க பெங்களூர் டூ சென்னைக்கான சிறப்புக் கட்டணச் சலுகையாகும்.


தற்போது ரூ. 786 கட்டணத்தில் இன்னொரு சலுகையை அது அறிவித்துள்ளது. இந்த சலுகைக்கான முன்பதிவு இன்று தொடங்கி ஜூலை 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இதில் பதிவு செய்பவர்கள் அடுத்த ஆண்டு பிப்ரவரி 1 முதல் ஏப்ரல் 30 தேதி வரை பெங்களூர் அல்லது புது டெல்லியில் இருந்து தாங்கள் பதிவு செய்த இடங்களுக்கு பறந்து செல்லலாம். இந்த ரூ. 786 என்பது அடிப்படைக் கட்டணம் மட்டுமே.


இதுகுறித்து ஏர் ஏசியா அதிகாரி அமர் அப்ரோல் '' கபாலி வெளியீட்டை முன்னிட்டு இந்த சலுகையை அறிவித்திருக்கிறோம். இப்போது ஒவ்வொருவரும் ஒரு சூப்பர் ஸ்டார் போல விமானத்தில் பறந்து செல்லலாம்'' என்று தெரிவித்திருக்கிறார்.


இதுதவிர கபாலி பிரியாணி திட்டத்தையும் ஏர் ஏசியா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.!

English summary
AirAsia Today Launched ‘Fly like a Superstar’ sale Offer.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil