»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

சுனாமியால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினத்திற்கு விரைவில் ஐஸ்வர்யா ராய் வரவுள்ளாராம்.

சுனாமியால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட தமிழக மாவட்டமான கடலூரில் இன்னும் சுனாமியின் சோகம் போகவில்லை. இந்தமாவட்ட மக்களின் துயரத்தில் பங்கெடுத்துக் கொண்டதோடு நில்லாமல் இந்த மாவட்டத்திலேயே மோசமாக பாதிக்கப்பட்டதேவனாம்பட்டினம் கிராமத்திலேயே தங்கியிருந்து உதவி வருகிறார் இந்தி நடிகர் விவேக் ஓபராய்.

கடந்த 20 நாட்களாக தேவனாம்பட்டினத்தில் முகாமிட்டுள்ள ஓபராய் அந்தக் கிராமத்தை தத்தெடுத்துவிட்டார். அங்கு தற்காலிகவீடுகள் கட்டிக் கொடுத்ததோடு பல்வேறு உதவிகளையும் செய்து வருகிறார்.

உழைத்துச் சேர்த்த காசைக் கொடுத்து, விழுந்து விழுந்து படம் பார்த்து, நம்மால் வளர்ந்த, நாம் பார்த்து ஆளாக்கிய தமிழ்நடிகர்கள் ஒருவர் கூட நமது சோகத்தில் பங்கெடுத்துக் கொள்ளவில்லையே என்ற வேதனை இப்போது தேவனாம்பட்டினம்மக்களிடம் சுத்தமாக இல்லை.

அவர்களுக்கு தெரிந்த ஒரே நடிகர் இனிமேல் விவேக் ஓபராய்தான். அந்த அளவுக்கு தேவனாம்பட்டனம் மக்களின் மனம்கவர்ந்து விட்ட ஓபராய்க்கு உதவ அவரது காதலியும், இந்திய மக்களின் கனவுக் கன்னியுமான ஐஸ்வர்யா ராய் விரைவில்தேவனாம்பட்டினம் வரவுள்ளார்.

விவேக் ஓபராயின் பணிகளைப் பார்வையிட்டு அவருக்கு உதவவும், தன் சார்பில் பல்வேறு உதவிகளை தேவனாம்பட்டினம்மக்களுக்கு வழங்கவும் ஐஸ் இங்கு வரவுள்ளார் என்று தெரிகிறது.

பாராட்டப்பட வேண்டிய விஷயம்தான்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil