»   »  இழுத்தடிக்கும் ஐஸ்வர்யா

இழுத்தடிக்கும் ஐஸ்வர்யா

Posted By:
Subscribe to Oneindia Tamil


துணை நடிகையுடன் கட்டிப்புரண்டு சண்டை போட்டு, பின்னர் அவரிடம் அடி வாங்கியது தொடர்பாக கொடுத்த புகார் தொடர்பான விசாரணைக்கு வராமல் டபாய்த்து வருகிறாராம் நடிகை ஐஸ்வர்யா.

Click here for more images

நடிகை லட்சுமியின் மகள் ஐஸ்வர்யா. பாட்டி ருக்மணி, தாய் லட்சுமி ஆகியோரது வழியில், ஐஸ்வர்யாவும் நடிகையானவர். ஆனால் வளர ஆரம்பித்த நேரத்தில் தேவையில்லாத சில பழக்கங்களுக்கு அடிமையாகி நடிப்பை விட்டார்.

பின்னர் தாயின் பேச்சையும் மீறி காதலித்துக் கல்யாணம் செய்து கொண்டார். ஆனால் அந்தக் கல்யாணம் நிலைக்கவில்லை. பல்வேறு பிரச்சினைகளில் உலைந்து கடைசியில் கணவரை விட்டுப் பிரிந்து தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு சர்ச்சையில் சிக்கினார் ஐஸ்வர்யா. அவரை துணை நடிகை ப்ரீத்தி உண்ணி என்பவர் ஆள் வைத்து அடித்து விட்டார் என்பதுதான் அந்த பரபரப்பின் பின்னணி.

சம்பவத்தன்று என்ன நடந்தது என்றால், அடையாரில் உள்ள ஒரு கிளப்புக்கு போயுள்ளார் ஐஸ்வர்யா. அங்கு குடிபோதையில் பலரும் ஆடியுள்ளனர். ஜோடி ஜோடியாக ஆட்டம் போட்டுள்ளனர். அவர்களில் ஐஸ்வர்யாவும் ஒருவர்.

டான்ஸர் ஒருவருடன் ஜோடி போட்டு ஆடுவதில் ஐஸ்வர்யாவுக்கும், ப்ரீத்திக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் தாறுமாறாக திட்டி சண்டையிட்டுள்ளனர். பிறகு வழக்கம் போல பெண்கள் சண்டை ஆரம்பமானது.

குடுமிபிடியில் இறங்கி, கட்டிப்புரண்டு பிரளயத்தை ஏற்படுத்தி விட்டனர். கூடியிருந்தவர்கள் உள்ளே புகுந்து இருவரையும் பிரித்துத் தனித் தனியாக அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து ப்ரீத்தி உண்ணி, ஐஸ்வர்யாவின் வீடு தேடி வந்து தகராறு செய்துள்ளார். வேலைக்காரப் பெண்ணையும் அவர் அடித்ததாக அமைந்தகரை போலீஸில் புகார் கொடுத்துள்ளார் ஐஸ்வர்யா. மேலும், தனது கைப்பையை ப்ரீத்தி திருடிச் சென்று விட்டதாகவும் தனது புகாரில் கூறியுள்ளார்.

இந்தப் புகார் குறித்து விசாரணையைத் தொடங்கிய போலீஸார், விசாரணைக்கு வருமாறு ஐஸ்வர்யாவை அழைத்தனராம். ஆனால் இதுவரை அவர் வராமல் டபாய்த்துக் கொண்டுள்ளாராம்.

பிரச்சினையை இப்படியே விட்டு விடுமாறும், தேவையில்லாமல் பல குழப்பங்களில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என ஐஸ்வர்யாவுக்கு அறிவுரை கொடுக்கப்பட்டதால்தான் தான் கொடுத்த புகாரை வலியுறுத்தாமல் அப்படியே விட்டு விட தீர்மானித்துள்ளார் ஐஸ்வர்யா என்கிறார்கள். விரைவில் தனது புகாரை ஐஸ்வர்யா வாபஸ் பெறலாம் என்றும் கூறப்படுகிறது.

Read more about: aishwarya clash lakshmi preethiunni

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil