»   »  சினிமா வீரன்... ஏஆர் ரஹ்மானுடன் கூட்டணி அமைக்கும் ஐஸ்வர்யா தனுஷ்!

சினிமா வீரன்... ஏஆர் ரஹ்மானுடன் கூட்டணி அமைக்கும் ஐஸ்வர்யா தனுஷ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

3, வை ராஜா வை படங்களுக்குப் பிறகு புதிய படமொன்றை இயக்குகிறார் ரஜினியின் மூத்த மகளும் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா.

இந்தப் படம் இதுவரை சினிமாவில் யாரும் தொடாத வித்தியாசமான கதையாக அமைந்துள்ளது.

Aishwarya Dhanush collaborates with AR Rahman

அப்படி என்ன வித்தியாசம் என்கிறீர்களா? தமிழ் சினிமாவின் எல்லா ஸ்டன்ட் மாஸ்டர்களையும் கொண்டாடும் விதமாக அமைக்கப்பட்டுள்ளதாம் திரைக்கதை. அதனால்தான் படத்துக்கே சினிமா வீரன் என்று தலைப்பிட்டுள்ளார் ஐஸ்வர்யா.

இந்தப் படத்துக்கென முதல் முறையாக ஏ ஆர் ரஹ்மானுடன் கை கோர்க்கிறார் ஐஸ்வர்யா. அவரது கேஎம் இசைப் பள்ளியைச் சேர்ந்த குதுப் இ க்ரிபா இந்தப் படத்துக்கு பின்னணி இசை அமைக்கவிருக்கிறார்கள்.

இதுகுறித்து சமூக வலைத்தளமான ட்விட்டரில் தனது பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார் ஏ ஆர் ரஹ்மான்.

English summary
Aishwaryaa Dhanush is back with another new project. And who is she collaborating with this time? Well, it is none other than AR Rahman.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil