»   »  ஐஸ்வர்யா தனுஷ் ஆடியது ஐ.நா. நிகழ்ச்சியே இல்லையாம்: உண்மையை புட்டு வைத்த பத்திரிகையாளர்

ஐஸ்வர்யா தனுஷ் ஆடியது ஐ.நா. நிகழ்ச்சியே இல்லையாம்: உண்மையை புட்டு வைத்த பத்திரிகையாளர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: எத்தனையோ பரதக் கலைஞர்கள் இருக்கும்போது ஐ.நா.வில் ஆட ஐஸ்வர்யா தனுஷ் அழைக்கப்பட்டதன் உண்மையை பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மகளிர் தினத்தையொட்டி ஐ.நா. சபையில் நடந்த கொண்டாட்டத்தில் இயக்குனர் ஐஸ்வர்யா தனுஷ் கலந்து கொண்டு பரதநாட்டியம் ஆடினார். அவர் புதுமையாக எதையோ முயற்சிக்க அதுவே பலரின் கேலி, கிண்டலுக்கு ஆளாகிவிட்டது.

பரதமா ஆடினீர்கள் என்று பரதநாட்டியக் கலைஞர்களே ஐஸ்வர்யாவை விமர்சித்துள்ளனர்.

ஏன்?

ஏன்?

நாட்டில் எத்தனையோ பரதக் கலைஞர்கள் இருக்கும்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் என்பதற்காக ஐஸ்வர்யாவை ஐ.நா.வில் ஆட வைத்து இந்தியாவின் மானம் காற்றில் பறந்துவிட்டது என்று நெட்டிசன்கள் குமுறியுள்ளனர்.

ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா

ஐ.நா.வில் ஆடியதன் மூலம் ஜாம்பவானான எம்.எஸ். சுப்புலட்சுமி அல்லது சுதா ரகுநாதன் போன்று தானும் திறமையை வெளிப்படுத்தியதுபோன்ற நினைப்பை ஏற்படுத்தியுள்ளார் ஐஸ்வர்யா தனுஷ் என பத்திரிகையாளர் பிரமோத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஐ.நா.

ஐ.நா.

ஐ.நா.வில் உள்ள இந்திய அரசு அதிகாரிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் ஆடியதை இந்த பெண் புத்திசாலித்தனமாக மறைத்துவிட்டார். ஐ.நா. தலைமையகத்தில் உள்ள ஒரு பகுதியில் இந்திய அரசு நடத்திய நிகழ்ச்சி இது என்று பிரமோத் கூறியுள்ளார்.

ஐ.நா. உறுப்பினர்

ஐ.நா. சபையில் உறுப்பினராக இருக்கும் யாரும் அந்த அறையை புக் செய்து நிகழ்ச்சி நடத்தலாம்.( அந்த அறையில் நான் தலைமை செயலகத்தில் பணிபுரியும் என் நண்பருடன் மதிய உணவு சாப்பிட்டுள்ளேன்) என்கிறார் பிரமோத்.

நபர்கள்

நபர்கள்

இந்திய அரசு அல்லது வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் யாரையாவது தெரிந்திருந்தால் நீங்களும் செய்யலாம். எம்.எஸ். அல்லது சுதா ரகுநாதன் நிகழ்ச்சி தான் உண்மையான ஐ.நா. சபை நிகழ்ச்சி. போலியான கலையை இந்திய அரசு ஊக்குவிப்பதும், இது ஐ.நா. சபை நிகழ்ச்சியே இல்லை என்பதை தெரிவிக்காததும் வெட்கக்கேடு என பிரமோத் தனது ஃபேஸ்புக் போஸ்ட்டில் தெரிவித்துள்ளார்.

English summary
Journalist Pramod said in a Facebook post that Aishwarya Dhanush's performance was not arranged by the UN but by the Indian government.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil