»   »  பள்ளி கட்டட உரிமையாளர் மீது ஐஸ்வர்யா தனுஷ் ரூ 5 கோடி மான நஷ்ட வழக்கு

பள்ளி கட்டட உரிமையாளர் மீது ஐஸ்வர்யா தனுஷ் ரூ 5 கோடி மான நஷ்ட வழக்கு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆஸ்ரம் பள்ளி செயல்பட்டு வந்த கட்ட உரிமையாளர் மீது ரூ 5 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடர்ந்துள்ளார் ரஜினியின் மூத்த மகளும் பள்ளியின் செயலாளருமான ஐஸ்வர்யா தனுஷ்.

வாடகைப் பிரச்சினை என்று கூறி கிண்டியில் செயல்பட்டு வந்த லதா ரஜினிகாந்தின் ஆஸ்ரம் பள்ளி வளாகத்துக்குப் பூட்டுப் போட்டார் அதன் உரிமையாளர்.

Aishwarya Dhanush sues on ashram school building owner

ஆனால் வாடகைப் பிரச்சினையால் இப்படிச் செய்யவில்லை... அவர்களது குடும்பப் பிரச்சினையை பள்ளியின் நிர்வாகத்தின் மேல் சுமத்துவதாக லதா ரஜினி தரப்பில் கூறப்பட்டது.

இந்த நிலையில்தான் கட்டட உரிமையாளர் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார் ஐஸ்வர்யா தனுஷ்.

அதில், "தி ஆஸ்ரம் பள்ளி கட்டட உரிமையாளர் அவதூறு செய்திகளை பரப்பி வருகிறார். அவதூறு பரப்பும் ஆஸ்ரம் கட்டட உரிமையாளர் ரூ 5 கோடி நஷ்ட ஈடு வழங்கவேண்டும். உடனடியாக பூட்டை அகற்ற வேண்டும்," எனறு ஐஸ்வர்யா தனுஷ் உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.

ஐஸ்வர்யா தனுஷின் இந்த முறையீடு வழக்காக பதிவு செய்யப்பட்டது. இன்று விசாரணைக்கு வருகிறது.

English summary
Rajinikanth's daughter Aishwarya Dhanush has filed a defamation case on Ashram school building owner.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil