ஏஆர் ரஹ்மான் தோள்களில் சாய்ந்த ஐஸ்வர்யா ராய், த்ரிஷா: இருந்தாலும் இவ்வளவு வெட்கம் கூடாது பாஸ்!

மும்பை: மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

பொன்னியின் செல்வன் படத்தின் ரிலீஸை முன்னிட்டு படக்குழுவினர் மும்பையில் ரசிகர்களை சந்தித்தனர்.

மும்பை ப்ரோமோஷன் நிகழ்ச்சியின் போது ஏஆர் ரஹ்மானுடன் ஐஸ்வர்யாவும் த்ரிஷாவும் எடுத்துக்கொண்ட க்யூட் போட்டோ வைரலாகி வருகிறது.

பொன்னியின் செல்வன் டூர்

பொன்னியின் செல்வன் டூர்

மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்' வரும் 30ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா போன்ற டாப் ஸ்டார்ஸ்களை ஒன்றாக திரையில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்துக்கான ஆன்லைன் ரிசர்வேஷன் நேற்று தொடங்கி அனல் பறக்கும் வேகத்தில் டிக்கெட்டுகள் புக்கிங் ஆகி வருகின்றன. அதேபோல், பொன்னியின் செல்வன் படக்குழுவினரும் கொச்சி, பெங்களூரு, ஐதராபாத், மும்பை ஆகிய நகரங்களில் ரசிகர்களை சந்தித்து வருகின்றனர்.

மும்பையில் பேசிய இசைப்புயல்

மும்பையில் பேசிய இசைப்புயல்

பொன்னியின் செல்வன் தமிழில் உருவாகி இருந்தாலும், பான் இந்தியா படமாக தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் வெளியாகிறது. இதனையடுத்து மும்பையில் நடைபெற்ற பொன்னியின் செல்வன் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய ஏஆர் ரஹ்மான், "பொன்னியின் செல்வன் படம் பார்த்த பிறகு நான் அமேசான், நெட்ஃபிளிக்ஸ் போன்ற ஓடிடி தளங்களில் படங்கள், வெப் சீரிஸ் பார்ப்பதை நிறுத்திவிட்டேன். அதைவிட சூப்பரான மேக்கிங்கில் பொன்னியின் செல்வன் உருவாகியுள்ளது" எனத் தெரிவித்திருந்தார். இதனால், இந்தப் படம் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகமானது.

வைரலாகும் க்யூட் போட்டோ

வைரலாகும் க்யூட் போட்டோ

இந்நிலையில், மும்பையில் நடைபெற்ற பொன்னியின் செல்வன் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில், ஏஆர் ரஹ்மானுடன் ஐஸ்வர்யா, த்ரிஷா இருவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். எப்போதும் நடிகைகள் உட்பட யாருடனும் நெருக்கமாக போட்டோ எடுத்துக் கொள்ளமாட்டார் ஏஆர் ரஹ்மான். ஆனால், இந்தப் போட்டோவில் ஐஸ்வர்யா ராயும் த்ரிஷாவும் ஏஆர் ரஹ்மானின் தோள்களில் சாய்ந்தபடி விரசம் இல்லாமல் ரொம்ப க்யூட்டாக இருக்கின்றனர். ஏஆர் ரஹ்மானின் முகமும் வெட்கத்தில் சிவந்து போய் உள்ளது. சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகியுள்ள இந்தப் போட்டோ, மிக ஆத்மார்த்தமாக இருப்பதாக ரசிகர்கள் பலர் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

நான் ரொமாண்டிக்கான ஆள்

நான் ரொமாண்டிக்கான ஆள்

முன்னதாக ஏஆர் ரஹ்மான் ஒரு நேர்காணலில் "நான் அடிப்படையில் ரொம்ப ரொமாண்டிக்கான ஆள். ஆனால் சிறுவயதிலேயே அப்பா இறந்து குடும்பப் பொறுப்பை ஏற்று விட்டேன். வீட்டில் மூன்று பெண்கள் வேறு. அதனால் என் இளமைக்கால வாழ்வில் வேறு எதற்கும் நேரமேயில்லை' எனக் கூறியிருந்தார். ரஹ்மானின் இந்த பேட்டியையும் குறிப்பிட்டுள்ள ரசிகர்கள், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா இருவரும் ரஹ்மானுடன் இவ்வளவு க்யூட்டாக போட்டோ எடுத்துள்ளது பார்க்கவே மகிழ்ச்சியாகவும் வேடிக்கையாகவும் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X