ஏன் நிர்வாணமாக நடிக்கவில்லை..ஐஸ்வர்யா ராயிடம் நிருபர் மோசமான கேள்வி..விளாசும் நெட்டிசன்ஸ்!

சென்னை : பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராயிடம் நிருபர் ஒருவர் ஏன் நிர்வாணமாக நடிக்கவில்லை என்ற கேள்வி தற்போது பேசுபொருளாகி உள்ளது.

ஐஸ்வர்யா ராய் இந்திய சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர். இவர் 1994 ஆம் ஆண்டு 21 வயதில் மிஸ் வேர்ல்ட் என்ற பட்டத்தை பெற்றவர்.

மணிரத்னம் இயக்கிய இருவர் படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். 2007ம் ஆண்டு பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார். இந்த இத்தம்பதிக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார்.

ஐஸ்வர்யா ராய்

ஐஸ்வர்யா ராய்

இந்தி, தமிழ், பெங்காலி, ஆங்கில என அனைத்து மொழிப்படங்களிலும் நடித்து முன்னணி நடிகை என பெயர் எடுத்த ஐஸ்வர்யா ராயின் பழைய நேர்காணல் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் நிருபர் ஏன் நீங்கள் நிர்வாணமாக நடிக்கவில்லை என்று கேள்விகேட்டுள்ளார். இந்த கேள்வியால் கடுப்பான ஐஸ்வர்யா ராய் முகம் சட்டென்று மாறுகிறது.

டென்ஷனான ஐஸ்வர்யா ராய்

டென்ஷனான ஐஸ்வர்யா ராய்

பின்னர், சுதாரித்துக்கொண்ட ஐஸ்வர்யா, நான் ஒருபோதும் நிர்வாணத்தை ஆராய்ந்ததில்லை, நிர்வாணத்தை ஆராய்வதில் எனக்கு ஆர்வம் இல்லை என்று பதில் அளித்தார். தொடர்ந்து, அந்த நிருபர் மோசமான கேள்வியை கேட்டதால், கேமரா மேனை சுற்றிப் பார்த்து சத்தமாக, ஒரு பெண்ணிடம் பேசுகிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு பேசுங்கள். நீங்கள் ஒரு பத்திரிகையாளர், அந்த வேலையை மட்டும் செய்யுங்கள் என நச்சுனு பதில் அளித்தார்.

மோசமான கேள்வி

மோசமான கேள்வி

இந்த வீடியோவை பார்த்த ரசிகர் ஒருவர் என்ன ஒரு மோசமான கேள்வி என்றும், ஒரு நடிகை என்றால் என்ன வேண்டுமானாலும் கேட்கலாமா என்றும் கேட்டுள்ளார். மற்றொரு இணையவாசி ஹாலிவுட்டில் இது ஒரு பொதுவான நிகழ்வு என்றும், ஐஸ்வர்யாவின் இந்த பதில் அவரின் ஹாலிவுட் பட வாய்ப்புகளை பாதித்தது என்றும் கூறியுள்ளார்.

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

நடிகை ஐஸ்வர்யா ராய் தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்துள்ளார். மணிரத்னம் இயக்கியுள்ள இந்த பீரியட் ஆக்ஷன் படம், கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய வரலாற்று நாவலான பொன்னியின் செல்வனின் தழுவலாகும். இதில் ஐஸ்வர்யா, பழுவூர் இளவரசி, பெரிய பழுவேட்டரையரின் மனைவி நந்தினியாக நடித்துள்ளார். வருகிற செப்டம்பர் 30-ந் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படம் ரிலீசாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X