பொன்னியின் செல்வன் நாயகி கர்ப்பமா? வயிறு தெரியக்கூடாதுன்னு மறைக்கிறாரா?

சென்னை : நடிகை ஐஸ்வர்யா ராய் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியுள்ளது.

ஐஸ்வர்யா ராய் இந்திய சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர். இவர் 1994 ஆம் ஆண்டு 21 வயதில் மிஸ் வேர்ல்ட் என்ற பட்டத்தை பெற்றவர்.

மணிரத்னம் இயக்கிய இருவர் படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். 2007ம் ஆண்டு பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார்.

ஐஸ்வர்யா ராய்

ஐஸ்வர்யா ராய்

இந்தி, தமிழ், பெங்காலி, ஆங்கிலம் என அனைத்து மொழிப்படங்களிலும் நடித்து முன்னணி நடிகை என பெயர் எடுத்த ஐஸ்வர்யா ராய், மணிரத்னத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இரட்டை வேடங்களில் ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார். ஒன்று நந்தினி கதாபாத்திரம் மற்றொன்று அவரது ஊமை தாய் மந்தாகினி தேவி ரோலில் நடித்துள்ளார்.

வஞ்சகப் பெண்ணாக

வஞ்சகப் பெண்ணாக

தனது காதலனான வீர பாண்டியன் என்ற பாண்டிய மன்னனின் தலையை தன் கண் எதிரிலேயே கொய்த ஆதித்த கரிகாலனை பழி வாங்கவும், சோழ அரசை கவிழ்க்கவும் திட்டமிடும் ஒரு வஞ்சகப் பெண்ணாக முதன்முதலில் ஒரு நெகடிவ் ரோலில் நடித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை ரிலீஸ்

வெள்ளிக்கிழமை ரிலீஸ்

இப்படம் வெள்ளிக்கிழமை திரைக்கு வரவுள்ளது. இதையொட்டி படக்குழுவினர் பட விளம்பரத்தில் மும்முரமாக உள்ளனர். சென்னை, கேரளா,பெங்களுர், மும்பை மற்றும் ஐதராபாத்தில் நடைபெற்ற புரொமோஷன் நிகழ்ச்சியில் நடிகை ஐஸ்வர்யா ராய் பங்கேற்றார். ஐதராபாத் செல்வதற்காக ஐஸ்வர்யா ராய் மும்பை விமான நிலையத்திற்கு வந்த போட்டோ இணையத்தில் டிராண்டானது.

கர்ப்பமா இருக்கிறாரா?

கர்ப்பமா இருக்கிறாரா?

அந்த போட்டோவில், மிகவும் லூசாக வெள்ளை உடையை அணிந்துள்ளார். அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் ஐஸ்வர்யா ராய் மீண்டும் கர்ப்பமாக இருக்கிறார். அதற்காகத்தான் அவர் இவ்வளவு தளர்வான ஆடையை அணிந்து உள்ளார் என்றும், கர்ப்பமாக இருப்பதால் தான் ஐஸ்வர்யா பார்க்க ரொம்ப அழகா இருக்கார் என்று வேறு சிலர் கமெண்ட் செய்தனர்.

கர்ப்பமாக இருந்தால் என்ன

கர்ப்பமாக இருந்தால் என்ன

இதை பார்த்து கடுப்பான மற்றொரு குரூப், ஏன் எல்லாரும் அவர் கர்ப்பத்தை பற்றியே கேள்வி எழுப்புகிறீர்கள். அவர் கொஞ்சம் குண்டாக இருக்கிறார். வயது காரணமாக முகத்தில் மாற்றமும், கொஞ்சம் உடல் எடை கூடியும் உள்ளார். இதில் என்ன தவறு உள்ளது. அவர் கர்ப்பமாக இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன? என பதிலடி கொடுத்து கமெண்ட் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X