»   »  ஐஸ்வர்யா ராய் தற்கொலை: இது யாரு பார்த்த வேலை தெரியுமா?

ஐஸ்வர்யா ராய் தற்கொலை: இது யாரு பார்த்த வேலை தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் தற்கொலை செய்து கொண்டதாக பாகிஸ்தானில் இருந்து வதந்தி பரவி இந்தியா வந்தது தெரிய வந்துள்ளது.

ஏ தில் ஹை முஷ்கில் படத்தில் ஐஸ்வர்யா ராய், ரன்பிர் கபூருடன் நெருங்கி நடித்தார். இதனால் ஐஸ்வர்யாவின் கணவர் அபிஷேக் பச்சன், மாமனார் அமிதாப் பச்சன், மாமியார் ஜெயா ஆகியோர் கோபமாக இருந்ததாக கூறப்பட்டது.

இதையடுத்து பத்திரிகை ஒன்றுக்கு ஐஸ்வர்யாவும், ரன்பிரும் நெருக்கமாக கொடுத்த போஸ்களாலும் அவரது குடும்ப வாழ்க்கையில் பிரச்சனையாக இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

தற்கொலை

தற்கொலை

ஏ தில் ஹை முஷ்கில் படப் பிரச்சனையால் வீட்டில் புயல் வீசுவதை அடுத்து ஐஸ்வர்யா ராய் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி தீயாக பரவியது.

ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா

என்னது, ஐஸ்வர்யா ராய் தற்கொலை செய்து கொண்டாரா? அதை அவரது குடும்பத்தார் மறைத்துவிட்டனரா? என ரசிகர்கள் பதற அதன் பிறகே அது வதந்தி என்று தெரிய வந்து நிம்மதி அடைந்தனர்.

பாகிஸ்தான்

பாகிஸ்தான்

நல்லா இருக்கும் ஐஸ்வர்யா ராய் பற்றி தற்கொலை வதந்தியை பரப்பி விட்டது யார் என்று பார்த்தால் பாகிஸ்தான் நாட்டு சதி என்று தெரிய வந்துள்ளது. அங்கிருந்து யாரோ வதந்தியை பரப்ப அது காத்து வாக்கில் இந்தியா வந்துவிட்டதாம்.

 அமிதாப் பச்சன்

அமிதாப் பச்சன்

என்ன ஜி, உங்களின் மருமகள் தற்கொலை செய்து கொண்டதாக வதந்தி பரவியதே ஜி என அமிதாப் பச்சனிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவரோ லேசாக சிரித்துவிட்டு சென்றுவிட்டார்.

English summary
Aishwarya Rai's death rumours have reportedly originated in Pakistan. When asked about this, Amitabh Bachchan smiled and refused to comment.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil