பொன்னியின் செல்வன்ல ஐஸ்வர்யா ராயின் மகள் இப்படியொரு வேலை பண்ணியிருக்காங்களா? அம்மா பூரிப்பு!
சென்னை: இருவர், குரு, ராவணன் படங்களை தொடர்ந்து மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் நடித்துள்ளார் ஐஸ்வர்யா ராய்.
இயக்குநர் மணிரத்னத்துக்கு எப்போதும் மரியாதை கொடுத்து வரும் ஐஸ்வர்யா ராய், பொன்னியின் செல்வன் படத்தில் மகள் ஆரத்யா கொடுத்த பங்களிப்பு பற்றி பேசி பூரிப்படைந்துள்ளார்.
வரும் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ள பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி மற்றும் மந்தாகினி என இரு வேடங்களில் ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மணிரத்னம் இயக்கத்தில்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் இருவர் படத்தில் நடித்து அசத்திய ஐஸ்வர்யா ராய், மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் தனது கணவர் அபிஷேக் பச்சன் உடன் குரு படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு சியான் விக்ரம், அபிஷேக் பச்சன் நடித்த ராவணன் படத்திலும் அவர் நடித்திருந்தார். இந்நிலையில், 4வது முறையாக மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார்.

டபுள் ரோல்
இயக்குநர் மணிரத்னத்தின் 25வது படமான பொன்னியின் செல்வனில் நடிகை ஐஸ்வர்யா ராய் நந்தினி மற்றும் மந்தாகினி என இரு வேடங்களில் நடித்துள்ளார். சோழர் குலத்தையை அழிக்கும் கதாபாத்திரத்திலும், சோழர் குல இளவரசன் பொன்னியின் செல்வனை காக்கும் வேடத்திலும் ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார்.

செட்டிற்கு விசிட் அடித்த மகள்
பொன்னியின் செல்வன் படத்தின் பல காட்சிகள் ஜெய்ப்பூர் அரண்மனையில் படமாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஐஸ்வர்யா ராயை சந்திக்க அடிக்கடி பொன்னியின் செல்வன் சூட்டிங் ஸ்பாட்டுக்கு அவரது மகள் ஆரத்யா வர வாய்ப்புகள் அமைந்துள்ளன. இதிகாச படத்தின் சூட்டிங்கை பார்க்கவே படு பிரம்மிப்பாக உள்ளது அம்மா என வியந்து என் மகள் பேசியது எனக்கே வியப்பாக இருந்தது.

மணிரத்னத்தின் மீது மரியாதை
நடிகை ஐஸ்வர்யா ராய் எந்தளவுக்கு மணிரத்னத்திடம் மரியாதை வைத்துள்ளாரோ அதை விட அதிகமாகவே அவரது மகள் ஆரத்யா இயக்குநர் மணிரத்னத்திடம் மரியாதையும் அன்பும் செலுத்தி வந்ததை பார்த்து தனக்கே ஆச்சர்யமாக அமைந்தது என சமீபத்தில் நடந்த பிரஸ்மீட் ஒன்றில் ஐஸ்வர்யா ராய் கூறியுள்ளார்.

ஆக்ஷன் சொன்ன ஆரத்யா
ஒரு நாள் இயக்குநர் மணிரத்னம் ஆரத்யாவை அழைத்து நடிகர்கள் நடிப்பதற்காக கிளாப் போர்ட் அடித்தவுடன் இயக்குநர்கள் சொல்லும் ஆக்ஷன் என்பதை சொல்ல வைத்திருக்கிறர். ஆரத்யாவும் செம சந்தோஷத்தில் அந்த வாய்ப்பை மிஸ் செய்யாமல் பயன்படுத்தி உள்ளார். இதுவரை எனக்கு கூட மணி சார் படத்தில் இப்படியொரு வாய்ப்பு கிடைத்ததில்லை. அந்த பாக்கியம் என் மகளுக்கு கிடைத்தது எனக்கு ரொம்பவே சந்தோஷம் என பேசினார் ஐஸ்வர்யா ராய்.


Click it and Unblock the Notifications











