»   »  'அவரை' டீலில் விட்டுட்டு மாதவனுக்கு ஈஸியா ஓகே சொன்ன ஐஸ்வர்யா ராய்

'அவரை' டீலில் விட்டுட்டு மாதவனுக்கு ஈஸியா ஓகே சொன்ன ஐஸ்வர்யா ராய்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தனது அடுத்த படத்தில் ஐஸ்வர்யா ராய் மாதவனுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.

பாலிவுட் இயக்குனர் அனில் மஞ்சுரேகர் அனில் கபூர், ஐஸ்வர்யா ராய் பச்சன் உள்ளிட்டோரை வைத்து ஃபேனி கான் என்ற படத்தை எடுக்கிறார். இந்த படத்தில் ஐஸ் ஜோடி அனில் இல்லை.

அனில் கபூர், ஐஸ்வர்யா ராய் ஏற்கனவே ஜோடியாக நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜ்குமார் ராவ்

ராஜ்குமார் ராவ்

ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாக நடிக்குமாறு ராஜ்குமார் ராவ் மற்றும் விக்கி கவுஷல் ஆகியோரிடம் பேசப்பட்டதாம். ஆனால் அது சரிபட்டு வராததால் வேறு ஒரு நடிகரை தேடினார்கள்.

மாதவன்

மாதவன்

பாலிவுட்டிலும் ஏகப்பட்ட ரசிகர்-ரசிகைகள் வைத்துள்ள மாதவன் ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாக நடிக்க உள்ளாராம். மாதவனுக்கு பாலிவுட்டிலும் நல்ல மார்க்கெட் உள்ளது.

குரு

குரு

மணிரத்னத்தின் குரு படத்தில் ஐஸ்வர்யா ராய், மாதவன் நடித்துள்ளனர். ஆனால் அந்த படத்தில் ஐஸுக்கு ஜோடியாக அவரது கணவர் அபிஷேக் பச்சன் நடித்தார்.

படப்பிடிப்பு

படப்பிடிப்பு

ஃபேனி கான் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் துவங்குகிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். முன்னதாக ரஜினிக்கு ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா ராய் மறுத்தார். பின்னர் மாமனார் அமிதாப் சொன்ன பிறகே சம்மதித்தார். இந்நிலையில் மாதவனுடன் நடிக்க உடனே ஓகே சொல்லியுள்ளார் ஐஸ்.

English summary
Aishwarya Rai Bachchan is reportedly romancing Madhavan in the upcoming Bollywood movie Fanney Khan to be directed by Anil Manjrekar.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil