»   »  பெருமைப்பட வேண்டிய நேரத்தில் லோ கட் ஆடையால் நெளிந்த ஐஸ்வர்யா ராய்

பெருமைப்பட வேண்டிய நேரத்தில் லோ கட் ஆடையால் நெளிந்த ஐஸ்வர்யா ராய்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ஆஸ்திரேலியாவில் நடந்த இந்திய திரைப்பட விழாவில் கலந்து கொண்ட நடிகை ஐஸ்வர்யா ராய் தனது உடையால் நெளிந்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடந்த இந்திய திரைப்பட விழாவில் பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் தனது மகள் ஆராத்யாவுடன் கலந்து கொண்டார்.

ஐஸ்வர்யா இந்திய தேசியக் கொடியை ஏற்றினார்.

ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா

நிகழ்ச்சிக்கு ஐஸ்வர்யா ராய் மனிஷ் மல்ஹோத்ரா டிசைனர் உடை அணிந்து வந்தார். லோ கட் நெக் வைத்த அந்த உடையால் ஐஸ்வர்யாவுக்கு சங்கடமாகிவிட்டது போல. இது அவர் நடவடிக்கையிலேயே தெரிந்தது.

உடை

உடை

நிகழ்ச்சி முழுவதும் ஐஸ்வர்யா தனது கை அல்லது துப்பட்டாவால் முன்னழகு தெரியாமல் மறைத்துக் கொண்டே இருந்தார். புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்கும்போது கூட நெஞ்சில் கையை வைத்துக் கொண்டே நின்றார்.

மீடியா

மீடியா

மீடியாவுக்கு பேட்டி அளித்த போதும் சரி, ரசிகர்களுடன் உரையாடியபோதும் சரி ஐஸ்வர்யா தனது நெஞ்சில் கை வைத்தபடியே இருந்தார். இதனால் அவர் அசவுகரியமாக உணர்ந்தது அனைவருக்கும் தெரிந்தது.

பெருமை

பெருமை

மெல்போர்னில் நடக்கும் இந்திய திரைப்பட விழாவில் இந்திய தேசியக் கொடியை ஏற்றிய முதல் இந்திய நடிகை ஐஸ்வர்யா. ஆனால் இந்த பெருமையான நேரத்தில் ஐஸ்வர்யாவுக்கு உடையால் சிக்கலாகிவிட்டது. ஐஸ்வர்யாவை காண நிகழ்ச்சி நடந்த ஃபெடரேஷன் ஸ்கொயரில் ஏராளமானோர் கூடியிருந்தனர்.

English summary
Bollywood actress Aishwarya Rai Bachchan felt uncomfortable at the Indian Film Festival of Melbourne because of her deep neck designer outfit.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil