»   »  ஐஸ்வர்யா ராயின் தந்தை புற்றுநோயால் மரணம்: டாக்டர் அறிவிப்பு

ஐஸ்வர்யா ராயின் தந்தை புற்றுநோயால் மரணம்: டாக்டர் அறிவிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ஐஸ்வர்யா ராயின் தந்தை புற்றுநோயால் அவதிப்பட்டு வந்ததாக அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராயின் தந்தை கிருஷ்ணராஜ் ராய் உடல் நலக் குறைவு காரணமாக மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

10 நாட்களுக்கும் மேலாக தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் நேற்று மாலை 4 மணிக்கு உயிர் இழந்தார். இதையடுத்து நேற்று இரவு 8.30 மணிக்கு அவருக்கு இறுதிச் சடங்கு செய்யப்பட்டது.

புற்றுநோய்

புற்றுநோய்

ஐஸ்வர்யா ராயின் தந்தை புற்றுநோயால் அவதிப்பட்டு வந்ததாக அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் லெப்டினென்ட் ஜெனரல் ரவிசங்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா

கிருஷ்ணராஜ் ராயை தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றியதில் இருந்தே ஐஸ்வர்யா ராய் சரியாக சாப்பிடாமல், தூங்காமல் மருத்துவமனையிலேயே இருந்து வந்தார்.

தந்தை

தந்தை

ஐஸ்வர்யா ராய் தனது தந்தையின் செல்லமாகும். எதுவாக இருந்தாலும் முதலில் தந்தையிடம் தான் கூறுவார். அபிஷேக் பச்சனை திருமணம் செய்வதா, வேண்டாமா என்று குழம்பியபோது கூட அவரை மணக்குமாறு கிருஷ்ணராஜ் ராய் தான் கூறியுள்ளார்.

ஆறுதல்

ஆறுதல்

தந்தையை இழந்து வாடும் ஐஸ்வர்யா ராய்க்கு பாலிவுட் பிரபலங்கள் ஆறுதல் கூறி வருகிறார்கள். மங்களூரை சேர்ந்த ஐஸ்வர்யா குடும்பத்தாருடன் மும்பையில் செட்டிலானார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Bollywood actress Aishwarya Rai's dad Krishnaraj Rai died of cancer on saturday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil