»   »  'டேக் எ செல்பி புள்ள' ராணுவ வீரர்களுடன் செல்பி கிளிக்கிய உலக அழகி

'டேக் எ செல்பி புள்ள' ராணுவ வீரர்களுடன் செல்பி கிளிக்கிய உலக அழகி

Posted By:
Subscribe to Oneindia Tamil

அமிர்தசரஸ்: படப்பிடிப்புக்கு சென்ற இடத்தில் எல்லைப் பாதுகாப்பு வீரர்களுடன் ஐஸ்வர்யா ராய் எடுத்துக் கொண்ட செல்பிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.

ஜாஸ்பா படத்தின் மூலம் பாலிவுட்டில் ரீ-என்ட்ரியான ஐஸ்வர்யா தற்போது சர்பிஜித் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்புக்காக அவர் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் பகுதியில் முகாமிட்டுள்ளார்.

இந்நிலையில் அங்குள்ள எல்லைப் பாதுகாப்பு வீரர்களின் விருப்பத்தை நிறைவேற்ற அவர்களுடன் ஐஸ்வர்யா புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்.

ஐஸ்வர்யாராய்

ஐஸ்வர்யாராய்

ஐஸ்வர்யா ராய் அமிர்தசரஸ் பகுதிக்கு படப்பிடிப்புக்கு வந்த தகவலை அறிந்த, எல்லைப் பாதுகாப்பு வீரர்கள் அவரைப் பார்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

சந்திப்பு

சந்திப்பு

வீரர்களின் கோரிக்கையை ஏற்ற ஐஸ்வர்யா படப்பிடிப்பு முடிந்ததும் அவர்களை சந்தித்துப் பேசினார். பின்னர் தங்களுடன் செல்பி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வீரர்கள் கோரிக்கை வைக்க, பதிலுக்கு அவர்களுடன் இணைந்து ஐஸ்வர்யா பல்வேறு செல்பிக்களை கிளிக்கிக் கொண்டார்.

வீரர்களின் பரிசு

வீரர்களின் பரிசு

மேலும் பாதுகாப்பு படை வீரர்கள் ஐஸ்வர்யாவிற்கு தங்களின் அன்புப் பரிசாக ராணுவ தொப்பியை அளித்தனர். அவர்களின் பரிசினை ஏற்றுக் கொண்ட ஐஸ் அந்த தொப்பியை அணிந்தும் சில புகைப்படங்களை எடுத்துக் கொண்டிருக்கிறார்.

ஆரத்யா

ஆரத்யா

படப்பிடிப்பிற்கு இடையில் மகள் ஆராத்யாவுடன் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலுக்கும் ஒரு விசிட் அடித்திருக்கிறார் ஐஸ்வர்யா. இது குறித்து அவர் "ஆராத்யாவின் வசதிகேற்பவே நான் எனது படப்பிடிப்புகளை திட்டமிடுகிறேன். அவள் என்னுடன் எப்போதும் உடனிருப்பதையே நான் விரும்புகிறேன்" என்று கூறியிருக்கிறார்.

சர்பிஜித் சிங்

சர்பிஜித் சிங்

சர்பிஜித் படம் இந்திய விவசாயி சர்பிஜித் சிங்கின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வருகிறது. இந்தியா-பாகிஸ்தான் எல்லையைக் கடந்த குற்றத்திற்காக சர்பிஜித் சிங்கை பாகிஸ்தான் அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், கடந்த 2013 ம் ஆண்டு சிறையில் சக கைதிகளால் தாக்கப்பட்டு அவர் உயிரிழந்தார்.

சகோதரி வேடத்தில்

சகோதரி வேடத்தில்

இந்தப் படத்தில் சர்பிஜித் சிங்கின் சகோதரி வேடத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்து வருகிறார். வருகின்ற மே மாதம் 19 ம் தேதி இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டிருக்கிறது.

English summary
In Sarbjit Shooting Aishwarya Rai take Selfie with BSF Jawans, Now These Photos Goes Viral On Social Networks.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil