ஜாஸ்மின் பட இயக்குனர்கள் மீது ஐஸ்வர்யா ராய் கோபத்தில் உள்ளாராம்.
மும்பை: ஜாஸ்மின் பட இயக்குனர்கள் மீது ஐஸ்வர்யா ராய் கோபத்தில் உள்ளாராம்.
அனில் கபூருடன் சேர்ந்து ஃபேனி கான் படத்தில் நடித்து முடித்துள்ளார் ஐஸ்வர்யா ராய். இந்நிலையில் வாடகை தாய் பற்றிய கதை கொண்ட ஜாஸ்மின் படத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராயை அணுகியதாகவும், அவர் நடிக்க ஒப்புக் கொண்டதாகவும் இந்தி மீடியாக்கள் செய்தி வெளியிட்டன.
முதலில் இந்த படத்தில் அனுஷ்கா சர்மா நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகின.
ஜாஸ்மின்
குஜராத்தில் வசிக்கும் ஒரு வாடகை தாயின் உண்மை கதை தான் ஜாஸ்மின் படக் கதையாம். இந்த படத்திற்காக ஐஸ்வர்யா ராயை இயக்குனர்கள் அணுகியதாக கூறப்பட்டது.
இயக்கம்
டாய்லெட்: ஏக் பிரேம் கதாவுக்கு திரைக்கதை எழுதிய சித்தார்த் மற்றும் கரிமா இயக்கும் படமே ஜாஸ்மின். படத்தை ஸ்ரீ நாராயண் சிங் தயாரிக்கிறார். குஜராத் மற்றும் ராஜஸ்தானில் படப்பிடிப்பு நடக்க உள்ளது.
இல்லை
ஜாஸ்மின் படத்தில் நடிக்கச் சொல்லி ஐஸ்வர்யாவை யாரும் அணுகவில்லையாம். ஸ்க்ரிப்டை கூட கண்ணில் காட்டாமல் தன் பெயரை பயன்படுத்திய இயக்குனர்கள் மீது ஐஸ்வர்யா கோபத்தில் உள்ளாராம்.
அனுஷ்கா
இயக்குனர்கள் செய்த குளறுபடியால் அவர்கள் இனி கேட்டாலும் ஐஸ்வர்யா ஜாஸ்மின் படத்தில் நடிப்பது சந்தேகமே என்று கூறப்படுகிறது. அடுத்து அனுஷ்கா சர்மாவை கேட்பார்களோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.