»   »  இந்த தீபாவளி ஐஸ்வர்யா ராய்க்கு கருப்பு தீபாவளி, ஏன்னா...

இந்த தீபாவளி ஐஸ்வர்யா ராய்க்கு கருப்பு தீபாவளி, ஏன்னா...

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு இந்த தீபாவளி கருப்பு தீபாவளி ஆகும்.

பாலிவுட்டில் பச்சன்கள் அளிக்கும் தீபாவளி பார்ட்டி மிகவும் பிரபலம். பச்சன்கள் பார்ட்டியில் கலந்து கொள்ள பாலிவுட் பிரபலங்கள் ஆவலாக இருப்பார்கள்.

அமிதாப் பச்சன் தனது பங்களாவான ஜல்சாவில் பிரபலங்களுக்கு தீபாவளி பார்ட்டி அளிப்பார்.

பச்சன்கள்

பச்சன்கள்

இந்த ஆண்டு பச்சன்கள் யாரும் தீபாவளியை கொண்டாடப் போவது இல்லை என்று முடிவு செய்துள்ளனர். அதனால் ஜல்சாவில் பார்ட்டி எதுவும் நடக்காது.

கொண்டாட்டம்

கொண்டாட்டம்

தீபாவளி பண்டிகையை ஐஸ்வர்யா ராய் மட்டும் அல்ல அவரது கணவரின் குடும்பத்தார் யாரும் கொண்டாடவில்லை. ஐஸ்வர்யாவின் தந்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு மரணம் அடைந்தார்.

மனநிலை

மனநிலை

தந்தை இறந்த துக்கத்தில் இருந்து ஐஸ்வர்யா ராய் இன்னும் மீளவில்லை. அதனால் எந்த பண்டிகையும் கொண்டாடும் மனநிலையில் அவர் இல்லையாம்.

 பிறந்தநாள்

பிறந்தநாள்

மருமகளின் மனநிலையை புரிந்து கொண்ட மாமனார் அமிதாப் பச்சன் தனது பிறந்தநாளை கூட கொண்டாடவில்லை. அமிதாப் பச்சனின் பிறந்தநாள் இன்று என்பது குறிப்பிடத்தக்கது.

நெருக்கம்

நெருக்கம்

ஐஸ்வர்யா ராய் தனது தாயை விட தந்தையிடம் தான் நெருக்கமாக இருந்தார். அப்பா செல்லமான அவர் எதுவாக இருந்தாலும் முதலில் அவரிடம் தான் தெரிவிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The Bachchan's Diwali party is one of the most awaited events of the year. Every year, on this auspicious day, the family hosts a grand function for its Bollywood friends. But this year, Aishwarya Rai Bachchan and her entire family will not celebrate the festival of lights.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil