ரெட்ரோ ஸ்டைலில் மஞ்சக் காட்டு மைனாவாக ஐஸ்வர்யா ராஜேஷ்: தெறிக்கவிடும் டிரைவர் ஜமுனா Cool Dude சாங்!
சென்னை: ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'டிரைவர் ஜமுனா' படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.
ஜிப்ரான் இசையமைத்துள்ள Cool Dude என்ற இந்தப் பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
கின்ஸ்லி இயக்கத்தில் உருவாகும் 'டிரைவர் ஜமுனா' விரைவில் வெளியாகவுள்ளது.

ஆக்சனில் களமிறங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்
ரம்மி, பண்ணையாரும் பத்மினியும். காக்கா முட்டை, செக்க சிவந்த வானம், கனா, வானம் கொட்டட்டும், திட்டம் இரண்டு, பூமிகா போன்ற படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கான தனி இடைத்தைப் பிடித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தற்போது 'டிரைவர் ஜமுனா' படத்தில் ஆக்சன் அவதாரம் எடுத்துள்ளார். கின்ஸ்லி இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கார் டிரைவராக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ட்ரெய்லரில் எகிறும் எதிர்பார்ப்பு
ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, 'ஆடுகளம்' நரேன், கவிதா பாரதி, ஸ்டாண்ட் அப் காமெடியன் அபிஷேக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏற்கனவே 'டிரைவர் ஜமுனா' படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் ரீச் ஆகிவிட்டது. ஆக்சன் திரில்லர் ஜானரில் வெளியான இந்த ட்ரெய்லர், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தியுள்ளது. இந்நிலையில், தற்போது 'டிரைவர் ஜமுனா' படத்தின் ப்ரோமோ பாடல் வெளியாகி பட்டையைக் கிளப்பி வருகிறது.

ரெட்ரோ ஸ்டைலில் சூப்பர் பாட்டு
ஜிப்ரான் இசையில் Cool Dude என்ற டைட்டிலில் வெளியான இப்பாடலை, விஷ்ணுப்ரியா ரவி பாடியுள்ளார், அ.ப. ராசா எழுதியுள்ளார். 'குக் வித் கோமாளி' அஸ்வினுக்கு ஹிட் கொடுத்த 'குட்டி பட்டாசு', 'பேபி நீ சுகர்' உள்ளிட்ட சில பாடல்களை இவர் எழுதியுள்ளார். அதேபோன்றே Cool Dude பாடலையும் ரகளையான வரிகளால் எழுதி ஐஸ்வர்யா ராஜேஷை ஆட்டம் போட வைத்துள்ளார்.

டான்ஸில் கலக்கும் வைத்த ஐஸ்வர்யா ராஜேஷ்
ரெட்ரோ ப்ளஸ் வெஸ்டர்ன் ஸ்டைலில் ஜிப்ரான் இசையைமைத்துள்ள Cool Dude பாடல், யூடியூப்பில் வீவ்ஸை அள்ளி வருகிறது. ஐஸ்வர்யா ராஜேஷும் செம்மையாக ஆட்ட போட்டு அசர வைத்துள்ளார். அதோடு அவரது ரெட்ரோ ஸ்டைல் காஸ்ட்யூம்களும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











