Don't Miss!
- News
சென்னையில் பிப்ரவரி 1,2 தேதிகளில் ஜி20 கல்விப் பணிக் குழுவின் முதலாவது கூட்டம்
- Lifestyle
இந்த சூப்பர் உணவுகள் தாமதமான உங்கள் மாதவிடாயை சில மணி நேரங்களில் வரவைக்குமாம்...!
- Technology
யூஸ் பண்றீங்களோ இல்லயோ.. உங்க லேப்டாப்பில் இந்த வெப் ப்ரவுஸர் இருக்கா? அப்போ அலெர்ட் ஆகிக்கோங்க!
- Sports
"அந்த ஒரு விஷயம்.. உலகில் சூர்யகுமாரிடம் மட்டுமே உள்ள திறமை.. ரிக்கிப் பாண்டிங் புகழாரம் - விவரம்
- Automobiles
டாடாவை கதையை முடிக்க பிளான்... ரயிலைபோல் அடுத்தடுத்து ஆறு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கு போகிறது மாருதி சுஸுகி!
- Finance
2 நாளில் 12 லட்சம் கோடி ரூபாய் அவுட்.. சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிவில் முடிவு..!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
கேட்கும்போதே தலை சுத்துது.. லேசான காய்ச்சலுக்கு ஒரு லட்சம் பில்லு போட்ட ஹாஸ்பிட்டல்.. நடிகை திடுக்!
Recommended Video
சென்னை: லேசான காய்ச்சலுக்கு பிரபல நடிகை ஒருவர் ஒரு லட்சம் ரூபாய் பில் கட்டியதாக கூறியுள்ளார்.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களும் இவர்களும் என்று படத்தின் மூலம் 2011ஆம் ஆண்டு தமிழ்த்திரைத்துறைக்கு அறிமுகமானார். இவர் திரைத்துறை குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார்.
அப்பா, தாத்தா என அனைவரும் தெலுங்கு சினிமாத்துறையை சேர்ந்தவர்கள் ஆவார். ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், காக்காமுட்டை, திருடன் போலீஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
பவர்ஸ்டார்
சீனிவாசன்
வாழ்க்கையில்
தான்
எத்தனை
பவர்
பிளக்சுவேசன்ஸ்

மெய் படம்
தற்போது ஏஎஸ் பாஸ்கரன் இயக்கத்தில் சுந்தரம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள மெய் என்ற படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக டிவிஎஸ் சுந்தரம் குடும்பத்தை சேர்ந்த நிக்கி சுந்தரம் கதாநாயகனாக இந்த படத்தில் அறிமுகமாகிறார்.

ஒரு லட்சம் ரூபாய் பில்
இந்த படம் நாளை மறுநாள் ரிலீஸாகிறது. இதனை முன்னிட்டு படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், லேசான காய்ச்சல் என்று மருத்துவமனைக்கு சென்ற தஎனக்கு ஒரே நாளில் ஒரு லட்சம் ரூபாய் பில் போட்டார்கள் என்று கூறியுள்ளார்.

ஒரு டோலோ 650 மாத்திரை
மேலும் காய்ச்சலுக்காக எம்.ஆர்.ஐ ஸ்கேன், இ.சி.ஜி உள்ளிட்ட தேவையில்லாத பரிசோதனைகள் செய்யப்பட்டதாகவும் ஐஸ்வர்யா ராஜேஷ் கூறினார். கடைசியாக தனக்கு கொடுக்கப்பட்டது ஒரு டோலோ 650 மாத்திரைதான் என்றும் அவர் வேதனையுடன் கூறினார்.

நல்ல மருத்துவமனைகள்
பின்னர் ஞாயிற்றுக்கிழமை டிஸ்சார்ஜ் ஆகக்கூடாது என்றும் திங்களன்று தான் வெளியேற வேண்டும் என்றும் புதிய நிபந்தனைகள் எல்லாம் விதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். அனைத்து மருத்துவமனைகளும் இப்படி இல்லை, சில நல்ல மருத்துவமனைகளும் இருக்கின்றன என்றும் அவர் கூறினார்.

முறைகேடுகள் களையப்பட வேண்டும்
மெய் படம் மருத்துவத் துறையில் மலிந்து கிடக்கும் முறைகேடுகளை கூறும் படம். மருத்துவத்துறையில் குவிந்து கிடக்கும் முறைகேடுகள் களையப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்தப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன் என்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்தார்.