நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் 25வது திரைப்படம் "பூமிகா" நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது!

சென்னை : அரை டஜன் திரைப்படங்களுக்கும் மேல் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிஸியாக நடித்து வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷின் 25வது திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துள்ளார்.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதையம்சத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு பூமிகா என பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் இப்போது இந்த படம் ஓடிடியில் நேரடியாக வெளியாக இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது.

ஐயப்பனும் கோஷியும்

ஐயப்பனும் கோஷியும்

ஐஸ்வர்யா ராஜேஷுக்கு அடுத்தடுத்த திரைப் படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருவதால் இப்பொழுது கை நிறைய படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் இவருக்கு மார்க்கெட் உயர்ந்து வருவதால் அங்குள்ள முன்னணி நடிகர்களும் இவரை திரைப்படங்களில் நடிக்க வைக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் நானியின் டக் ஜெகதீஷ் திரைப்படத்தில் முக்கிய வேடத்திலும் ரிபப்ளிக், ஐயப்பனும் கோஷியும் தெலுங்கு ரீமேக் போன்ற படங்களில் ஹீரோயினாகவும் நடித்து வருகிறார்.

அடுத்த மாதம் ஓடிடியில்

அடுத்த மாதம் ஓடிடியில்

நயன்தாரா,த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், ஆகியோரை தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளில் நடிப்பதில் ஐஸ்வர்யா ராஜேஷும் ஆர்வம் காட்டி வர ஏற்கனவே இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் திட்டம் இரண்டு என்ற படத்தில் லீட் ரோலில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த மாதம் ஓடிடியில் வெளியாக இருப்பது உறுதியாகி உள்ளது.

த்ரில்லர் கதை

த்ரில்லர் கதை

இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷின் 25ஆவது திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்திருக்க இப்படத்திற்கு பூமிகா என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற பூமிகா த்ரில்லர் கதை களத்தில் உருவாகி உள்ளது.

Recommended Video

Aishwarya Rajesh மக்களிடம் வேண்டுகோள் | நம்மையும் நாட்டையும் பாதுகாப்போம்
நெட்ஃபிளிக்ஸ் தளத்தில்

நெட்ஃபிளிக்ஸ் தளத்தில்

இயக்குனர் மணிரத்னம் தயாரிப்பில் உருவாகிவரும் நவரசா மற்றும் வேதாளம் சொல்லும் கதை ஆகிய படங்களை இயக்கியுள்ள ரதீந்திரன் ஆர்.பிரசாத் இப்படத்தை இயக்கியுள்ளார். கொரோனா சூழல் காரணமாக பெரும்பாலான திரைப்படங்கள் அடுத்தடுத்து ஓடிடியில் வெளியாகி வரும் நிலையில் இப்பொழுது பூமிகா படமும் ஓடிடிக்கு வந்துள்ளது. அதன்படி ஆகஸ்ட் மாதம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் இப்படம் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் விஜய் தொலைக்காட்சி இப்படத்தின் ஒளிபரப்பு உரிமையை கைப்பற்றியுள்ளது .

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X