Don't Miss!
- News
"சலங்கை ஒலி" இயக்குநர் கே.விஸ்வநாத் காலமானார்.. சோகத்தில் ஆழ்ந்த திரையுலகம்!
- Automobiles
இந்த அளவுக்கு புக்கிங் வரும்னு மாருதியே நெனச்சிருக்காது! 2 புதிய கார்களை வாங்க எல்லாரும் போட்டி போட்றாங்க!
- Sports
உடைந்த கைகளால் பேட்டிங்.. அணிக்காக ஒற்றை கையில் போராடிய ஹனுமா விஹாரி.. எதிரணி வீரர்களே பாராட்டு!
- Lifestyle
பளபளப்பான ஜொலிக்கும் சருமத்தை பெற... நீங்க ஏன் இயற்கை பொருட்களை மட்டும் பயன்படுத்தனும் தெரியுமா?
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
Driver Jamuna Twitter Review :டிரைவர் ஜமுனா ஜம்முன்னு இருக்கா? இல்லையா?ட்விட்டர் விமர்சனம் இதோ!
சென்னை : 18 ரீல்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.பி. சௌத்ரி தயாரித்து இன்று திரையரங்கில் வெளியாகவிருக்கும் திரைப்படம் டிரைவர் ஜமுனா.
இயக்குநர் கிங்ஸ்லின் இயக்கி உள்ள இப்படத்தில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கால் டாக்சி இயக்கும் ஓட்டுநராக நடித்திருக்கிறார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் ஆடுகளம் நரேன், கவிதா பாரதி, அபிஷேக் குமார், இளைய பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் என ஏராளமானோர் நடித்துள்ளனர். இன்று காலை வெளியான சிறப்பு காட்சியில் படம் பார்த்த ரசிகர்களின் ட்விட்டர் விமர்சனத்தை பார்க்கலாம்.
பிக்பாஸ் வீட்டில் ஐஸ்வர்யா ராஜேஷ்..ஒரு வேளை டிரைவர் ஜமுனா பட ப்ரமோஷனா? ஒரே கல்லில் ரெண்டு மாங்கா!

டிரைவர் ஜமுனா
காக்கா முட்டை, ரா/பெ ரணசிங்கம் படங்களில் முதன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஐஸ்வர்யா ராஜேஷ், டிரைவர் ஜமுனா படத்தில் லீட் ரோலில் நடித்துள்ளார். தந்தையின் இறப்பிற்கு பிறகு ஐஸ்வர்யா கால் டாக்சி டிரைவராகினார். ஒரு நாள் இவரது கால் டாக்சியில் பயணிக்கும் 3 பேர் கூலிப்படையைச் சேர்ந்தவர்கள் என்பதும், எம்எல்ஏவை கொல்ல அவர்கள் திட்டம்போடுகிறார்கள் என்பதை தெரிந்து கொள்கிறார். இவர்களிடம் இருந்து ஐஸ்வர்யா ராஜேஷ் தப்பித்தாரா? எம்.எல்.ஏ என்ன ஆனார் என்பது தான் படத்தின் மீதிக்கதை.

அருமையான நடிப்பு
டிரைவர் ஜமுனா படம் பார்த்த ஐஸ்வர்யா ராஜேஷின் தீவிர ரசிகர் ஒருவர் இப்படத்திற்கு 5க்கு 3.5 மதிப்பெண் கொடுக்கலாம். ஐஸ்வர்யா ராஜேஷின் நடித்து மிகவும் அருமையாக இருந்தது, குறிப்பாக கடைசி 20நிமிடத்தில் அட்டகாசப்படுத்திவிட்டார். ஜிப்ரனின் பிஜிஎம் வேறலெவலில், கேமராவும் சிம்ளி சூப்பர் என ஒவ்வொன்றும் சூப்பர் என பதிவிட்டுள்ளார்.

கிளைமாக்ஸ் காட்சி சூப்பர்
டிரைவர் ஜமுனா திரைப்படம் ஒரு நேர்த்தியான ஓர் ஃபெர்பெக்டான த்ரில்லர் திரைப்படமாக இருந்தது. இப்படம் முழுக்க முழுக்க சாலையிலேயே எடுக்கப்பட்டுள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ் சிறந்த நடிகை என்பதை இந்த படத்தின் மூலம் மீண்டும் நிரூபித்துள்ளார். படம் உண்மையில் கிளாமஸ் காட்சியில் உற்சாகத்தை அதிகரிக்கிறது. மேலும் படத்தின் BGM படத்திற்கு பலமாக இருக்கிறது என பதிவிட்டுள்ளார்.

சுவாரஸ்யமான கதை
எளிய மனிதர்களுக்கான கதைக்கு மிக சுவாரஸ்யமான திரைக்கதை அமைத்து , நெருப்பென வசனங்கள் தீட்டி அருமையான திரைப்படமாக்கியிருக்கும் இயக்குனர் கிங்ஸ்லின் அவர்களுக்கு வாழ்த்துகள். எந்த கதாபாத்திரத்திலும் தன்னை வெகு இயல்பாக பொருத்திக்கொள்ளும் அசுர நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் என பாராட்டி உள்ளார்.

திரில்லர் ஜனனில்
டிரைவர் ஜமுனா ஒரு த்ரில்லர் படமாக உள்ளது. உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில், ஐஸ்வர்யா ராஜேஷ் அதை கையாளும் விதம் அருமை, ஒரு சாதாரண கேப் ஓட்டுநராக அசதி உள்ளார். இறுதிவரை அந்த ட்விஸ்ட் உடைந்து விடாமல் கதையை அதே திரில்லர் ஜனனில் கொண்டு சென்றது ரசிக்கும்படி இருந்தது. படத்தின் சுவாரசியத்திற்கு ஏற்ப ன ஜிப்ரானி இசை ஸ்கோரை அள்ளிவிட்டது.