Don't Miss!
- Finance
விண்ணை முட்டிய FASTag வசூல்.. மத்திய அரசின் பிப்ரவரி அறிவிப்பு மூலம் ஜாக்பாட்..!
- Technology
LOGOக்களில் இவ்வளவு ரகசியங்கள் ஒளிந்திருக்கா? மொபைல் யூஸர்கள் கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!
- News
குடியரசு தினத்தை முன்னிட்டு 1091 உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நாளை வெளியீடு!
- Lifestyle
ருசியான... சோயா பீன்ஸ் கிரேவி செய்வது எப்படி?
- Automobiles
அனுமதி கிடைச்சாச்சு! பஜாஜின் விலை குறைவான காரை இனி தனி நபர்களும் வாங்கிக்கலாம்! மாருதிக்கு பலத்த அடி விழபோகுது
- Sports
உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேன் நான் தான்.. விராட் கோலியே எனக்கு பின்னாடி தான்.. பாக். வீரர் பேட்டி
- Travel
கடவுள்கள் பேசுமா? ஆம்! இந்தியாவில் உள்ள இந்த கோவிலில் கடவுள்கள் பேசுகின்றனவாம்! ஆச்சரியமாக இருக்கிறதா?
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
அடுத்தடுத்து வெளியாகும் ஐஸ்வர்யா ராஜேஷின் 2 படங்கள்... பிக் பாஸ் ப்ரோமோஷனில் களமிறங்குகிறாரா?
சென்னை: தமிழில் முன்னணி நடிகையாக கலக்கி வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், டிரைவர் ஜமுனா, தி கிரேட் இந்தியன் கிச்சன் படங்களில் நடித்துள்ளார்.
இந்த இரண்டு படங்களிலும் ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி பாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தி கிரேட் இந்தியன் கிச்சன், டிரைவர் ஜமுனா படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன.
உடல் எடையை குறைத்து கவர்ச்சியில் ரசிகர்களை திக்குமுக்காட வைக்கும் ஐஸ்வர்யா தத்தா!

பிஸியான ஐஸ்வர்யா ராஜேஷ்
ரம்மி, பண்ணையாரும் பத்மினியும். காக்கா முட்டை, செக்க சிவந்த வானம், கனா, வானம் கொட்டட்டும், திட்டம் இரண்டு, பூமிகா போன்ற படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கான தனி இடைத்தைப் பிடித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தற்போது 'டிரைவர் ஜமுனா', 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் டிரைவர் ஜமுனா ஆக்சன் ஜானரில் உருவாகியுள்ளது. அதே நேரம், தி கிரேட் இந்தியன் கிச்சன் மலையாளத்தில் இருந்து தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

அடுத்தடுத்து ரிலீஸ்
டிரைவர் ஜமுனா, தி கிரேட் இந்தியன் கிச்சன் இரண்டு படங்களுமே, ஐஸ்வர்யா ராஜேஷின் பாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ளன. முக்கியமாக தி கிரேட் இந்தியன் கிச்சன் மலையாளத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், ஏராளமான விருதுகளையும் வாங்கி குவித்தது. இதனால் இந்த இரண்டு படங்களுமே ஐஸ்வர்யா ராஜேஷுக்கு கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், தி கிரேட் இந்தியன் கிச்சன் அடுத்த வாரம் 29ம் தேதியும், டிரைவர் ஜமுனா 30ம் தேதியும் ரிலீஸாகின்றன.

பிக் பாஸ் ப்ரோமோஷன்?
டிரைவர் ஜமுனா படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷுடன் 'ஆடுகளம்' நரேன், கவிதா பாரதி, ஸ்டாண்ட் அப் காமெடியன் அபிஷேக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை பி.கின்ஸ்லி இயக்கியுள்ளார். அதேபோல், தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தை ஆர். கண்ணன் இயக்க, ராகுல் ராஜேஷ் உள்ளிட்ட பலர் ஐஸ்வர்யா ராஜேஷுடன் இணைந்து நடித்துள்ளனர். இந்நிலையில், ஐஸ்வர்யா ராஜேஷின் இரண்டு படங்கள் அடுத்தடுத்த நாட்களில் வெளியாக உள்ளதால், அவர் பிக் பாஸ் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அண்ணனுக்கு ஆதரவாக களமிறங்குவாரா?
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் மணிகண்டனும் விளையாடி வருகிறார். இதுவரை எவிக்சனில் இருந்து தப்பி பிழைத்துள்ள அவர், டைட்டில் வெல்வதற்கான வாய்ப்பு இல்லையென்றே தெரிகிறது. ஆனால், மணிகண்டன் நாமினேஷனில் இருந்த போது அவருக்கு ஆதரவாக வீடியோ வெளியிட்ட ஐஸ்வர்யா ராஜேஷ், ஆதரவாக ஓட்டும் கேட்டிருந்தார். அதனால், டிரைவர் ஜமுனா, தி கிரேட் இந்தியன் கிச்சன் படங்களின் ப்ரோமோஷனுக்காக பிக் பாஸ் வீட்டுக்குள் அவர் செல்லலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.