»   »  ரஜினி படத்துக்கு ஐஸ்வர்யா நிர்வாகத் தயாரிப்பு?

ரஜினி படத்துக்கு ஐஸ்வர்யா நிர்வாகத் தயாரிப்பு?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த படத்தையும் இயக்கவிருப்பது ரஞ்சித். அதைத் தயாரிக்கவிருப்பது தனுஷ். இதனை தனுஷே அறிவித்துவிட்டார்.

கோச்சடையான் படத்துக்கு பிறகு ரஜினியின் படங்களில் அவரது இளைய மகளின் பங்கு இருந்தது. கோச்சடையானை இயக்கியவர் மற்ற இரண்டு படங்களின் தயாரிப்பு நிர்வாகத்தில் இருந்தார்.

Aishwarya Rajini is executive producer for Rajini movie

தனுஷ் தயாரிக்கவிருக்கும் ரஜினி படத்துக்கு தனுஷின் மனைவி ஐஸ்வர்யாதான் நிர்வாக தயாரிப்பாம். தனுஷின் வொண்டர்பார் நிறுவனத்துக்கு ஐஸ்வர்யா தான் நிர்வாகியாக இருக்கிறார்.

இப்போது வடசென்னை படத்துக்கும், பவர் பாண்டி படத்துக்கும் நிர்வாக பொறுப்பை ஐஸ்வர்யா தான் கவனிக்கிறார். இதனால் ஐஸ்வர்யா படம் இயக்குவது தள்ளிப்போகிறது.

விஜய் சேதுபதியிடம் ஒரு கதை சொல்லி ஓகே வாங்கி வைத்திருக்கிறார் ஐஸ்வர்யா. விரைவில் அதுகுறித்த அறிவிப்பு வெளியாகவிருக்கிறது.

English summary
Aishwarya Rajini is officially appointed as the executive producer of Rajini starrer next movie under Wunderbar Films.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil