ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி...என்னாச்சு என பதறும் ரசிகர்கள்
சென்னை : சமீபத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா இன்று மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விஷயம் தெரிந்ததும் அவருக்கு என்னாச்சு என ரசிகர்கள் கவலையுடன் விசாரித்து வருகின்றனர்.
நடிகர் தனுஷை திருமணம் செய்து கொண்ட பிறகு டைரக்டர், டப்பிங் கலைஞர், பாடகி என பல அவதாரம் எடுத்தார் ஐஸ்வர்யா. திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகி 2 மகன்கள் இருக்கும் நிலையில் தாங்கள் பிரிய முடிவு செய்திருப்பதாக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் ஜனவரி மாதம் தங்களின் சோஷியல் மீடியா பக்கங்களில் அறிவித்தனர். பிறகு இருவருமே தங்களின் வேலைகளில் பிஸியாகினர்.

நாளை மியூசிக் வீடியோ ரிலீஸ்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ரொமான்டிக் லவ் மீயூசிக் வீடியோ ஒன்றை இயக்கி உள்ளார். முஷாஃபர் என பெயரிடப்பட்டுள்ள இந்த மியூசிக் வீடியோ தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய 3 மொழிகளில் நாளை ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதற்காக ஆவலாக காத்திருப்பதாக ஐஸ்வர்யா, சில பிடிஎஸ் போட்டோக்கள், வீடியோக்களுடன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். இதை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

என்னாச்சு ஐஸ்வர்யாவுக்கு
இந்நிலையில் தான் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரே போட்டோவுடன் போஸ்ட் போட்டுள்ளார் ஐஸ்வர்யா. இது பற்றி அவர் வெளியிட்டுள்ள தகவலில், கொரோனாவிற்கு முன், கொரோனாவிற்கு பின் என வாழ்க்கை ஆகி விட்டது. காய்ச்சல் மற்றும் தலைசுற்றல் இருந்ததால் மீண்டும் மருத்துவமனையில் உள்ளேன். எதுவாக இருந்தால் என்ன. உங்களுக்காக நேரம் செலவழித்து, உங்களுக்கு ஊக்கமளிக்கும் ஒரு டாக்டரை சந்திக்கும் போது மோசமான உணர்வு ஏற்படாது. பிரித்திகாச்சாரி..மகளிர் தினத்தில் உங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது என டாக்டருடன் இருக்கும் போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார் ஐஸ்வர்யா.

இதுதான் காரணமா
ஐஸ்வர்யா இயக்கி உள்ள முஷாஃபர் வீடியோவின் ஷுட்டிங் ஐதராபாத்தில் நடைபெற்ற போது அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்கள் மருத்துவமனையில் ஓய்வில் இருந்த ஐஸ்வர்யா, சமீபத்தில் தான் கொரோனாவில் இருந்து மீண்டு, மறுபடியும் ஷுட்டிங் வேலைகளை துவக்கினார். இந்நிலையில் கொரோனாவிற்கு பிந்தைய பாதிப்புக்களால் ஐஸ்வர்யாவிற்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

டிரெண்டிங்கில் ஐஸ்வர்யா
தான் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவலை ஐஸ்வர்யா சோஷியல் மீடியாவில் பகிர்ந்ததும், அவர் விரைவில் குணமடைய வேண்டும் என பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவரது மியூசிக் வீடியோ வெளியாக உள்ள நிலையில் அவருக்கு இப்படி நடந்து விட்டதே என பலர் கவலை தெரிவித்து வருகின்றனர். அதோடு #AishwrayaRajinikanth என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி அதை ட்விட்டரில் டிரெண்டிங் ஆக்கி உள்ளனர்.


Click it and Unblock the Notifications











