வேற லெவல்...ஐஸ்வர்யா ரஜினிகாந்த் யாருடன் மகளிர் தினம் கொண்டாடி இருக்கார் தெரியுமா?
சென்னை : தான் மகளிர் தினத்தை எப்படி, யாருடன் கொண்டாடி இருக்கிறேன் என்பதை சோஷியல் மீடியா பக்கத்தில் போட்டோ மற்றும் அசத்தலான கேப்ஷனுடன் வெளியிட்டுள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இதை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் லைக் செய்து, கமெண்ட் செய்து வருகின்றனர்.
நடிகர் தனுஷை திருமணம் செய்து கொண்ட பிறகு டைரக்டர், டப்பிங் கலைஞர், பாடகி என பல அவதாரம் எடுத்தார் ஐஸ்வர்யா. திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகி 2 மகன்கள் இருக்கும் நிலையில் தாங்கள் பிரிய முடிவு செய்திருப்பதாக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் ஜனவரி மாதம் தங்களின் சோஷியல் மீடியா பக்கங்களில் அறிவித்தனர். பிறகு இருவருமே தங்களின் வேலைகளில் பிஸியாகினர்.

நாளை மியூசிக் வீடியோ ரிலீஸ்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ரொமான்டிக் லவ் மீயூசிக் வீடியோ ஒன்றை இயக்கி உள்ளார். முஷாஃபர் என பெயரிடப்பட்டுள்ள இந்த மியூசிக் வீடியோ தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய 3 மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதற்காக ஆவலாக காத்திருப்பதாக ஐஸ்வர்யா, சில பிடிஎஸ் போட்டோக்கள், வீடியோக்களுடன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். இதை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

என்னாச்சு ஐஸ்வர்யாவுக்கு
இந்நிலையில் தான் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரே போட்டோவுடன் போஸ்ட் போட்டுள்ளார் ஐஸ்வர்யா. இது பற்றி அவர் வெளியிட்டுள்ள தகவலில், கொரோனாவிற்கு முன், கொரோனாவிற்கு பின் என வாழ்க்கை ஆகி விட்டது. காய்ச்சல் மற்றும் தலைசுற்றல் இருந்ததால் மீண்டும் மருத்துவமனையில் உள்ளேன். எதுவாக இருந்தால் என்ன. உங்களுக்காக நேரம் செலவழித்து, உங்களுக்கு ஊக்கமளிக்கும் ஒரு டாக்டரை சந்திக்கும் போது மோசமான உணர்வு ஏற்படாது. பிரித்திகாச்சாரி..மகளிர் தினத்தில் உங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது என டாக்டருடன் இருக்கும் போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார் ஐஸ்வர்யா.

இதுதான் காரணமா
ஐஸ்வர்யா இயக்கி உள்ள முஷாஃபர் வீடியோவின் ஷுட்டிங் ஐதராபாத்தில் நடைபெற்ற போது அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்கள் மருத்துவமனையில் ஓய்வில் இருந்த ஐஸ்வர்யா, சமீபத்தில் தான் கொரோனாவில் இருந்து மீண்டு, மறுபடியும் ஷுட்டிங் வேலைகளை துவக்கினார். இந்நிலையில் கொரோனாவிற்கு பிந்தைய பாதிப்புக்களால் ஐஸ்வர்யாவிற்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எப்படி கொண்டாடிருக்கார் பாருங்க
தற்போது மருத்துவமனையில் இருக்கும் ஐஸ்வர்யா, அங்குள்ள நர்ஸ்களுடன் சேர்ந்து ஜாலியாக அரட்டை அடித்து மகளிர் தினத்தை கொண்டாடி உள்ளார். நர்ஸ் சோஃபாவில் அமர்ந்திருக்க, ஐஸ்வர்யா தரையில் அமர்ந்தபடி அவர்களுடன் சிரித்து பேசிக் கொண்டிருக்கும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். அதோடு, மிகவும் அன்பான இந்த நர்ஸ்களுடன் சேர்ந்துமகளிர் தினத்தை கொண்டாடினேன். இந்த கொரோனாவிற்கு பிந்தைய பாதிக்களால் தாக்கப்பட்டிருக்கும் என்னை அக்கறையுடன் கவனித்து கொள்கிறார்கள். அக்கறை என்பது பெண்களுடன் கூடவே பிறந்தது.பெண்கள் எந்த பாத்திரத்தை ஏற்றாலும் அதில் அளவில்லாத அன்பை தரக் கூடியவர்கள்.

மகன்களுக்கு ஐஸ்வர்யா கற்று கொடுத்தது
வாழ்க்கையில் ஒவ்வொரு பெண்ணையும் எப்படி மரியாதையுடன் நடத்த வேண்டும் என்பதை நான் என் மகன்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளேன். ஏனெனில் அவர்களின் வாழ்க்கையின் சந்தோஷம் மற்றும் அன்பிற்கு ஆதாரம். உங்கள் வாழ்க்கையில் உள்ள பெண்களை நேசியுங்கள். வாழ்க்கையும் உங்களை பதிலுக்கு நேசிக்க துவங்கும். ஒவ்வொரு சூப்பர் வுமனுக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார். முன்னதாக காலையில் ஐஸ்வர்யா வெளியிட்ட பதிவில், பெண்ணாக பிறந்ததற்கு தான் ஒவ்வொரு நாளும் பெருமைப்படுவதாக கூறி இருந்தார்.


Click it and Unblock the Notifications











