இனி சேர வாய்ப்பேயில்லை...தனுஷுக்கு குட் பை சொன்ன ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

சென்னை : தனுஷுடன் இனி சேர்ந்து வாழ்வதற்கு வாய்ப்பே இல்லை என்பதை சூசமாக சொல்லி உள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இதை பார்த்த ரசிகர்கள் தனுஷ் மீது ஐஸ்வர்யாவுக்கு அப்படி என்ன கோபம் என கேட்டு வருகின்றனர்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தும், தனுஷும் தங்களின் 18 ஆண்டு கால திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக ஜனவரி மாதம் தங்களின் சோஷியல் மீடியா பக்கங்களில் அறிவித்தனர். அதற்கு பிறகு இருவரும் தங்களின் சினிமா வேலைகளில் கவனம் செலுத்த துவங்கினர். ஐஸ்வர்யா ரஜினிகாந்த், கோவிட் பாதிப்புகளுக்கு இடையிலும் தனது பயணி மியூசிக் வீடியோவை இயக்கி, வெளியிட்டுள்ளார்.

படங்களில் செம பிஸி

படங்களில் செம பிஸி

தொடர்ந்து பாலிவுட்டில் ஒரு படம் இயக்குவதற்கான வேலைகளில் இறங்கி உள்ளார். விரைவில் தமிழிலும் ஒரு படத்தை இயக்க திட்டமிட்டுள்ளாராம் ஐஸ்வர்யா. தனுஷும் மாறன் படத்திற்கு பிறகு திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் நானே வருவேன் படத்தின் இறுதிக்கட்ட ஷுட்டிங் நடந்து வருகிறது.

குடும்பத்தினரின் முயற்சி

குடும்பத்தினரின் முயற்சி

தனுஷை பிரிவதாக அறிவித்தாலும் தனது சோஷியல் மீடியா பக்கங்களில் தனது பெயரை ஐஸ்வர்யா தனுஷ் என்று தான் குறிப்பிட்டிருந்தார் ஐஸ்வர்யா. இதனால் அவர் தனுஷுடன் மீண்டும் சேர்ந்து வாழும் மனநிலைக்கு வந்துள்ளதாக பலர் கூறி வந்தனர். இருவரையும் சமாதானம் செய்து, சேர்த்து வைக்க இரு குடும்பத்தினரும் தீவிரமாக முயற்சி செய்து வந்ததாக கூறப்பட்டது. ஆனால் தனுஷ் தொடர்ந்து பிடிவாதமாக இருப்பதாகவும் சில தகவல்கள் பரவி வந்தன.

ஃபிரண்ட் என வாழ்த்திய தனுஷ்

ஃபிரண்ட் என வாழ்த்திய தனுஷ்

பிரிவை அறிவித்த பிறகு ஒருவரை பற்றி மற்றவர் பேசிக் கொள்ளாமல் இருந்த நிலையில், ஐஸ்வர்யாவின் பயணி வீடியோ வெளியானதற்கு ஃபிரண்ட் என குறிப்பிட்டு வாழ்த்து கூறியிருந்தார் தனுஷ். இதற்கு ஐஸ்வர்யாவும் நன்றி தெரிவித்திருந்தார். மனைவியை தனுஷ், ஃபிரிண்ட் என குறிப்பிட்டிருந்தது பலருக்கும் ஷாக்காக இருந்தாலும், மீண்டும் அவர்கள் சேருவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக நினைத்து சந்தோஷப்பட்டனர்.

கடுப்பாகி ஐஸ்வர்யா செய்த காரியம்

கடுப்பாகி ஐஸ்வர்யா செய்த காரியம்

ஆனால் அப்படி இல்லை என சொல்லும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில், தனது பெயரில் இருந்த தனுஷ் பெயரை நீக்கிவிட்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என மாற்றினார் ஐஸ்வர்யா. அதே சமயம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து ஐஸ்வர்யா ஆர் தனுஷ் என்று தான் இருந்தது. இந்நிலையில் இன்று, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்தும் தனுஷின் பெயரை நீக்கி உள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

இனி சேர வாய்ப்பே இல்லையா

இனி சேர வாய்ப்பே இல்லையா

இது வேதனை அளிப்பதாக இருந்தாலும் இது அவருடைய வாழ்க்கை, என்ன மாதிரியான உறவை தொடர வேண்டும் என்பதை அவர் தான் முடிவு செய்ய வேண்டும் என ரசிகர்கள் பலர் கமெண்ட் செய்துள்ளனர். அதே சமயம் இனி தனுஷுடன் சேருவதற்கு வாய்ப்பே இல்லை என்பதை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மறைமுகமாக சொல்லி விட்டாரோ என சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X