”எப்போதும் பலவீனமாக இருக்க முடியாது”: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட வெறித்தனமான ஒர்க்அவுட் வீடியோ

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா, தனுஷை பிரிந்து தனது மகன்களுடன் வாழ்ந்து வருகிறார்.

சினிமா இயக்குநர், பாடகி என பன்முகத் திறமையாளரான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், சோஷியல் மீடியாக்கள் ஆக்டிவாக இருப்பவர்.

இவர் ஜிம்மில் வெறித்தனமாக ஒர்க்அவுட் செய்யும் வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு மாஸ் காட்டியுள்ளார்.

சூப்பர் ஸ்டாரின் சூப்பர் வாரிசு

சூப்பர் ஸ்டாரின் சூப்பர் வாரிசு

தமிழ் சினிமா ரசிகர்களின் ஆல்டைம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா, சோஷீயல் மீடியாக்களில் ரொம்பவே ஆக்டிவாக இருப்பவர். தனுஷுடன் காதல் திருமணம் என சென்றுகொண்டிருந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த், '3' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். சமீபத்தில் கூட இந்தப் படம் ஆந்திராவில் வெளியாகி வசூலில் சக்கைப்போடு போட்டது. இயக்குநராக மட்டுமின்றி பாடகியாக விசில் படத்தில் 'நட்பே நட்பே' பாடலையும், ஆயிரத்தில் ஒருவன் படத்தில் 'உன்மேல ஆசைதான்' பாடலையும் பாடி மாஸ் காட்டியுள்ளார்.

தனுஷின் கேரியரில் பக்கபலமாக இருந்தவர்

தனுஷின் கேரியரில் பக்கபலமாக இருந்தவர்

சினிமாவில் அறிமுகமான இரண்டு வருடங்களிலேயே ஐஸ்வர்யாவை திருமணம் செய்துகொண்டார் தனுஷ். அதன்பிறகு ஐஸ்வர்யா தனுஷ் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவின் பல தளங்களிலும் ஒரு ரவுண்டு வந்தார் ஐஸ்வர்யா. முக்கியமாக ஐஸ்வர்யாவின் வருகைக்குப் பின்னர், தனுஷின் கேரியரில் மிகப் பெரிய சக்ஸஸ் கிடைத்தது. ஆனாலும், திடீரென அவர்கள் இருவரும் பிரிவதாக அறிவித்து ரசிகர்களையே அதிர்ச்சிக்குள்ளாக்கினர். இதனால், இப்போது தனது மகன்களுடன் வாழ்ந்து வருகிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

ஜிம்மில் வெற்றித்தனமான ஒர்க்அவுட்

ஜிம்மில் வெற்றித்தனமான ஒர்க்அவுட்

தனுஷின் பிரிவுக்குப் பின்னர் தன்னை ஆக்டிவாக வைத்துக்கொள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பல பயிற்சிகள் எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. அதில் பெரும்பாலும் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்வதையே வழக்கமாக வைத்துள்ளார். மேலும், அந்த வீடியோக்கள், போட்டோக்களை தனது டிவிட்டரில் அதிகமாக ஷேர் செய்து வருகிறார். பலருக்கும் உத்வேகம் அளிக்கும் வகையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இப்படி போட்டோ, வீடியோக்களை ஷேர் செய்து வருவது வைரலாகி வருகிறது. சமீபத்தில் கூட ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டு ட்ரெண்டிங்கில் இருந்தார்.

மீண்டும் வெளியான தரமான வீடியோ

மீண்டும் வெளியான தரமான வீடியோ

இந்நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டு, ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறார். ஜிம்மில் தம்புள்ஸ் வைத்து ஒர்க்அவுட் செய்யும் அவர், அதற்கேற்ப கேப்ஷன்களையும் போட்டு அசத்தியுள்ளார். அதில், "நிங்கள் ஒருவாரம் வலிமையானவர், ஒருவாரம் புத்திசாலி, நேர்மறையாக இருக்க கற்றுக்கொள்ளுங்கள், நீங்கள் எப்போதும் பலவீனமாக இருக்க முடியாது" என தரமான மோட்டிவேஷன் கேப்ஷன்களை போட்டு ஷேர் செய்துள்ளார். ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இந்த ட்வீட்டர் வீடியோ, தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X