போனி கபூரை திடீரென சந்தித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்...அவர்கிட்ட ரசிகர்கள் என்ன கேட்டிருக்காங்க பாருங்க?
மும்பை : கணவர் தனுஷ் உடனான பிரிவை அறிவித்த பிறகு சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.சமீபத்தில் 3 மொழிகளில் வெளியிடப்பட்ட இவரின் பயணி ஆல்பம் மிகுந்த வரவேற்பை பெற்றது.
ஏற்கனவே 3, வை ராஜா வை படங்களை இயக்கி உள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தற்போது அடுத்த படத்தை இயக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். விரைவில் இந்த புதிய படத்தின் அறிவிப்பு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனுஷை பிரிவதாக அறிவித்த பிறகு சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவாகி விட்ட ஐஸ்வர்யா, தன்னை பற்றிய போட்டோக்கள், வீடியோக்களை அதிகம் பகிர்ந்து வருகிறார்.

ரஜினி சார்பாக விருது பெற்ற ஐஸ்வர்யா
இந்த சமயத்தில் ரஜினிகாந்த்திற்கு, நேற்று வருமான வரித்துறை சார்பில் விருது வழங்கப்பட்டது. அதிக வரி செலுத்தியதற்காக ரஜினிக்கு இந்த விருது வழங்கப்பட்டது.இந்த விழாவில் ரஜினி கலந்து கொள்ள முடியாததால் அவருக்கு பதில் ஐஸ்வர்யா தான் இந்த விருதினை பெற்றுக் கொண்டார். அப்பா சார்பில் இந்த விருதை பெறுவது மகிழ்ச்சியாக உள்ளதாக அவர் சோஷியல் மீடியாவில் குறிப்பிட்டிருந்தார்.

போனி கபூருடன் சந்திப்பு
மும்பை பயணத்தின் ஒரு பகுதியாக பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை, ஐஸ்வர்யா சந்தித்துள்ளார். இந்த போட்டோவை தனது சோஷியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து,உங்களை சந்தித்து, உங்களுடன் காஃபி அருந்தியது மகிழ்ச்சியாக உள்ளது போனி கபூர் அங்கிள். பழைய காலங்கள், பப்பி அக்கா பற்றிய நினைவுகள், வேலைகள் பற்றி உங்களுடன் ஆலோசித்தது அற்புதமாக உள்ளது என கேப்ஷன் பதிவிட்டுள்ளார்.

ஐஸ்வர்யா படத்தை தயாரிக்கிறார் போனி கபூர்
ஐஸ்வர்யா பகிர்ந்த இந்த போட்டோ செம வைரலானது.இது சாதாரண சந்திப்பு தான் என்றாலும், ரசிகர்கள் அப்படி பார்க்கவில்லை. ஐஸ்வர்யா இயக்க போகும் புதிய படத்தை போனி கபூர் தயாரிக்க வாய்ப்புள்ளது. இது பற்றி விரைவில் அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்கின்றனர்.

ஐஸ்வர்யாகிட்ட ஃபேன்ஸ் என்ன கேட்டிருக்காங்க
அதோடு, ஐஸ்வர்யா ரஜினிகாந்த்திடம் அஜித் 61 அல்லது ஏகே 61 அப்டேட் ஏதாவது இருக்கா? உங்க கிட்ட ஏகே 61 பற்றி ஏதாவது தகவல் பகிர்ந்தாரா போனி கபூர் என கேட்டு வருகின்றனர். படத்தின் ஷுட்டிங் துவங்கி பல மாதங்கள் ஆகும் நிலையில் இதுவரை போனி கபூர் எந்த அப்டேட்டும் வெளியிடாததால், வலிமை படத்தை போலவே ஏகே 61 படத்திற்கும் ரசிகர்கள் அப்டேட் கேட்க துவங்கி விட்டனர்.

ஏகே 61 அப்டேட் லோடிங்
ஏகே 61 படத்தின் பெரும்பாலான ஷுட்டிங் வேலைகள் முடிக்கப்பட்டு விட்டதாகவும், விரைவில் இறுதிக்கட்ட ஷுட்டிங் புனேயில் துவங்கப்பட உள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது. அஜித் விரைவில் புதிய கெட்அப்பிற்கு மாறிய பிறகு இறுதிக்கட்ட ஷுட்டிங்கில் நடிப்பார் என்றும், ஆகஸ்ட் மாதத்தில் படத்தின் மொத்த பணிகளும் முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் துவங்கப்பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.அதோடு ஆகஸ்ட் 13 ம் தேதி ஸ்ரீதேவியின் பிறந்தநாளை முன்னிட்டு ஏகே 61 டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் வெளியிடப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











