நீங்க ரொம்ப லக்கி...ஐஸ்வர்யா ரஜினியை புகழும் ரசிகர்கள்... அப்படி என்ன நடந்தது?
சென்னை : நடிகர் ரஜினிகாந்த்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திடீரென இன்று போட்டுள்ள போஸ்ட்டை நெட்டிசன்கள் புகழ்ந்து வருகின்றனர். அவர் போட்ட போஸ்ட் பலரையும் அவர் மீது பொறாமைப்பட வைத்துள்ளது.
தனது கணவர் தனுஷை பிரிவதாக ஜனவரி மாதம் அறிவித்தது முதல் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என்ன செய்தாலும், சோஷியல் மீடியாவில் என்ன போஸ்ட் போட்டாலும் உடனடியாக அவை டிரெண்டிங் ஆகி விடுகின்றன. தினம் ஒரு போஸ்ட் போட்டு அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்து வருகிறார்.

இன்ஸ்டாவில் பிஸியான ஐஸ்வர்யா
தனுஷை பிரிவதாக அறிவித்த ஐஸ்வர்யா, ஆரம்பத்தில் சிறிது நாட்கள் சோஷியல் மீடியா பக்கமே வராமல் இருந்து வந்தார். பிறகு திடீரென தான் இயக்கிய வீடியோ சாங் ஷுட்டிங்கின் BTS போட்டோக்களை வெளியிட்டு வந்தார். பிறகு திடீரென கொரோனாவால் பாதிக்கப்பட்டது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது, மீண்டும் ஷுட்டிங்கிற்கு திரும்பியது, மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது என அனைத்தையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வந்தார்.

ஐஸ்வர்யாவின் திடீர் மாற்றம்
பிறகு திடீரென மகன்களுடன் இருக்கும் போட்டோ, தான் காபி குடிப்பது, புத்தகம் படிப்பது, வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்வது என தனிப்பட்ட விஷயங்களையும் அதிகம் பகிர துவங்கினார். நேற்று உலக சகோதரர்கள் தினத்தை முன்னிட்டு, தனது தங்கை செளந்தர்யாவுடன் காரில் சென்ற போட்டோவை பகிர்ந்து, உணர்ச்சிப்பூர்வமாக கேப்ஷனும் போட்டிருந்தார்.

அட செம போஸ்டா இருக்கே
இந்நிலையில் இன்று திடீரென இசைஞானி இளையராஜாவை சந்தித்து, அவர் ஸ்டூடியோவில் இருக்கும் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார். அதோடு, எனது திங்கட்கிழமை பகல் பொழுது இளையராஜா அங்கிளின் இசையும், மந்திர சக்தியும் இல்லாமல் இருந்தால் இனிமையாகி இருக்காது என கேப்ஷன் போட்டிருந்தார். இதற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

நீங்க ரொம்ப லக்கி ஐஸ்வர்யா
பலரும் இளையராஜாவுடன் அவர் எடுத்துக் கொண்ட போட்டோக்களை பார்த்து விட்டு, நீங்க ரொம்ப லக்கி மேடம். இளையராஜா இசையமைப்பதை நேரிலேயே பார்த்திருக்கிறீர்கள். அவருடன் பொழுதை செலவிட்டுள்ளீர்கள். இது போன்ற பல நல்ல விஷயங்களை கடவுள் தொடர்ந்து உங்களுக்கு கொடுக்க வேண்டும். எதற்காக ஐஸ்வர்யா மேடம் இந்த சந்திப்பு என்றும் கேட்டுள்ளனர். அவர் மிகவும் அதிர்ஷ்டம் செய்தவர் என்றே ஏராளமானோர் கமெண்ட் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











