Don't Miss!
- News
சென்னையில் பிப்ரவரி 1,2 தேதிகளில் ஜி20 கல்விப் பணிக் குழுவின் முதலாவது கூட்டம்
- Lifestyle
இந்த சூப்பர் உணவுகள் தாமதமான உங்கள் மாதவிடாயை சில மணி நேரங்களில் வரவைக்குமாம்...!
- Technology
யூஸ் பண்றீங்களோ இல்லயோ.. உங்க லேப்டாப்பில் இந்த வெப் ப்ரவுஸர் இருக்கா? அப்போ அலெர்ட் ஆகிக்கோங்க!
- Sports
"அந்த ஒரு விஷயம்.. உலகில் சூர்யகுமாரிடம் மட்டுமே உள்ள திறமை.. ரிக்கிப் பாண்டிங் புகழாரம் - விவரம்
- Automobiles
டாடாவை கதையை முடிக்க பிளான்... ரயிலைபோல் அடுத்தடுத்து ஆறு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கு போகிறது மாருதி சுஸுகி!
- Finance
2 நாளில் 12 லட்சம் கோடி ரூபாய் அவுட்.. சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிவில் முடிவு..!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
பர்சனல் வேறு...புரொஃபஷன் வேறு...அப்ளாஸ் அள்ளும் ரஜினி மகளின் BTS போட்டோஸ்
சென்னை : ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தின் BTS போட்டோக்கள் ரசிகர்களிடம் பாராட்டையும் பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது. இதற்கு பிரபலங்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா, நடிகர் தனுஷை 2004 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் ஜனவரி 17 ம் தேதி தங்களின் 18 ஆண்டு கால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்ததாக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் பரஸ்பரம் தங்களின் சோஷியல் மீடியா பக்கங்களில் அறிவித்தனர்.
அப்பாவும்
மகனும்
எப்படியெல்லாம்
வெறித்தனம்
காட்டியிருக்காங்க
பாருங்க..
மகான்
மேக்கிங்
வீடியோ!

ஐஸ்வர்யா பற்றிய வதந்திகள்
தனுஷ் உடனான பிரிவை அறிவித்த பிறகு பல வதந்திகளில் சிக்கி, பிறகு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் ஐஸ்வர்யா. அதற்கு பிறகும் ஐஸ்வர்யாவின் இன்ஸ்டாகிராம் போஸ்ட், பேட்டி பலவற்றை வைத்து அவர் மீண்டும் தனுஷுடன் இணைய போகிறாரா, ஐஸ்வர்யா மனதை மாற்றிக் கொண்டாரா என பலவகையிலும் தகவல்கள் வெளியாகின.

மியூசிக் வீடியோ டைரக்ஷன்
ஆனால் அனைத்தையும் சமாளித்து, அனைத்திலிருந்தும் மீண்டு வந்துள்ளார் ஐஸ்வர்யா. தற்போது மீண்டும் டைரக்ஷன் வேலைகளில் தீவிரம் காட்டி வருகிறார். 3, வை ராஜா வை படங்களை இயக்கிய ஐஸ்வர்யா, தற்போது மியூசிக் வீடியோ ஒன்றை இயக்கி வருகிறார். மூன்று மொழிகளில் தயாராகி உள்ள இந்த பாடலை தமிழில் அனிருத் பாடி உள்ளார். இதன் ப்ரோமோ சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், விரைவில் முழு வீடியோவும் வெளியிடப்பட உள்ளது.

கெத்தாக மீண்டு வந்த ஐஸ்வர்யா
கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த ஐஸ்வர்யா மீண்டும் ஷுட்டிங்கிற்கு திரும்பி உள்ளார். தனது டீமுடன் ஐஸ்வர்யா பேசிக் கொண்டிருக்கும் BTS போட்டோக்கள் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. இதனை பலரும் வரவேற்று வருகின்றனர். பர்சனல் வேறு, புரொஃபஷனல் வேறு என மீண்டும் கெத்தாக ஐஸ்வர்யா ஷுட்டிங்கு திரும்பி உள்ளது அனைவரையும் அசர வைத்துள்ளது.

ஐஸ்வர்யா வர்ணித்த அழகி
ஐஸ்வர்யாவே இந்த BTS போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, பல வருடங்கள் கழித்து இந்த அழகிகளில் ஒருவரை (கேமிரா) கையாள்வதில் உள்ள மகிழச்சி...படமே பேசுகிறது. கலவையான உணர்வுகள் மீண்டும் வேலைக்கு திரும்பியது. முதல் நாள் நன்றாக முடிந்தது. ஒளிப்பதிவாளர் விஷ்ணு, ஜானி மாஸ்டர் மற்றும் எனது நான்கு அற்புதமான பாடகர்கள். உங்கள் அனைவருக்கும் நன்றி மட்டும் சொன்னால் போதாது என்றார்.