Don't Miss!
- Automobiles
கார் ஓட்டும்போது ஏன் கழுத்து வலிக்குது தெரியுமா? இந்த விஷயங்களை செஞ்சா வலி இருந்த இடமே தெரியாம பறந்து போயிரும்
- News
ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பது தமிழ்நாட்டுக்கு அழகல்ல! ஆர்.என்.ரவிக்கு ஆதரவாக சசிகலா!
- Sports
"கிரிக்கெட்டின் அழிவு இது".. பாகிஸ்தானை போல மாறி வருகிறதா இந்தியா??.. ஆகாஷ் சோப்ரா மன வேதனை!
- Finance
திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.. சர்ப்ரைஸ் கொடுத்த டாடா மோட்டார்ஸ்.. ரூ.2958 கோடி லாபம்..!
- Lifestyle
நீங்க நினைத்ததை விட எடையை வேகமாக குறைக்க இந்த பழங்கள் அல்லது காய்கறி சாறுகளில் ஒன்றை தினமும் குடித்தால் போதும்
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
- Technology
வாரே வா.. பிரபல நிறுவனத்தின் 42-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கி அதிரடி காட்டிய பிளிப்கார்ட்.!
சட்டுன்னு பார்த்த உடனே தனுஷ்னு நினைச்சீங்களா.. பேரக் குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடும் ரஜினிகாந்த்!
சென்னை: பேரக் குழந்தைகளுடன் தாத்தா ரஜினிகாந்த் கொஞ்சி விளையாடும் புகைப்படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுத்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்தின் 72வது பிறந்தநாள் டிசம்பர் 12ம் தேதி சோஷியல் மீடியா டிரெண்டிங்கில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் ரஜினிகாந்தை வாழ்த்தினர்.
அன்பு நண்பர் சூப்பர் ஸ்டார் வெற்றிப்பயணம் தொடரட்டும்.. ரஜினிகாந்த் பிறந்தநாள்.. கமல் வாழ்த்து!

ரசிகர்கள் ஏமாற்றம்
நடிகர் ரஜினிகாந்தின் 72வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. ரஜினிகாந்தை சந்திப்பதற்காக வழக்கம் போல அவர் வீட்டு வாசல் முன்பாக கொட்டும் மழையிலும் ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால், அவர் வீட்டில் இல்லைப்பா என லதா ரஜினிகாந்த் சொல்லி அனுப்ப ரசிகர்கள் ஏமாற்றத்துடன் அங்கிருந்து சென்றனர்.

சச்சின் முதல் ஷாருக்கான் வரை
ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்காக ஜெயிலர் படத்தின் அறிமுக வீடியோ வெளியிடப்பட்டது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கமல்ஹாசன், தனுஷ், சச்சின் டெண்டுல்கர், ஷாருக்கான், துல்கர் சல்மான், மீனா, பார்த்திபன், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல பிரபலங்கள் சூப்பர் ஸ்டாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

பேரக் குழந்தைகளுடன் ரஜினி
'மை பர்த்டே பாய் வித் மை பாய்ஸ்' என கேப்ஷன் கொடுத்து அப்பா ரஜினியுடன் மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா எடுத்துக் கொண்ட க்யூட் போட்டோவை பகிர்ந்து வாழ்த்தி உள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் ஏகப்பட்ட கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.

தனுஷ் மாதிரியே இருக்கான்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பகிர்ந்த இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் பெரிய பையன் யாத்ராவை பார்த்தால் அப்படியே அப்பா தனுஷ் போல இருக்கானே என்றும் ரஜினியை போல பேரக் குழந்தை இருக்கு என்றும் ரசிகர்கள் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

லால் சலாம்
ஜெயிலர் படத்திற்கு பிறகு மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு கேமியோ ரோலில் நடித்து வருகிறார். விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஹீரோவாக நடித்து வரும் கிரிக்கெட் தொடர்பான படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வரும் நிலையில், அப்பாவை இயக்குவதில் ரொம்ப ஹாப்பியாக உள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.