மகன் மடியில் அமர்ந்து போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்...எதுக்கு இந்த போஸ்ட்?

சென்னை : மகன் மடியில் போஸ் கொடுத்த பிளாக் அன்ட் ஒயிட் போட்டோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இதை பார்த்த ரசிகர்கள், எதற்கு திடீரென இப்படி ஒரு போஸ்ட் என கேட்டு வருகின்றனர்.

கணவர் தனுஷை பிரிவதாக அறிவித்த பிறகு டைரக்ஷனில் பிஸியாக இருந்து வந்தார் ஐஸ்வர்யா. கொரோனா பாதிப்பு, மருத்துவமனை சிகிச்சை, மியூசிக் வீடியோ டைரக்ஷன், பாலிவுட் பட கதை டிஸ்கஷன் என பரபரப்பாக இருந்து வந்தார். தனது ஷுட்டிங் ஸ்பாட் BTS போட்டோக்களையும் அவர் வெளியிட்டு வந்தார்.

என்னாச்சு ஐஸ்வர்யாவுக்கு

என்னாச்சு ஐஸ்வர்யாவுக்கு

பிறகு திடீரென தனது மகன்கள் இருவரும் தனக்கு முத்தம் கொடுப்பது போன்ற போட்டோ ஒன்றை பகிர்ந்து, உருக்கமான கேப்ஷனையும் பதிவிட்டார். இந்த போட்டோவிற்கு பிறகு தினமும் காபி குடிப்பது, புத்தகம் படிப்பது, ஒர்க் அவுட் செய்வது, மியூசிக் கேட்பது என பல விதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். தனது அன்றாட நிகழ்வுகள் பற்றியும், அதற்கு விளக்கமும் அளித்து வந்தார் ஐஸ்வர்யா.

யாருக்கு மெசேஜ் சொல்கிறார்

யாருக்கு மெசேஜ் சொல்கிறார்

இதனால் சிலர், ஐஸ்வர்யா எதற்காக இப்படி போஸ்ட் போட்டு வருகிறார். தனுஷின் பிரிவை தாங்க முடியாமல் மன அழுத்தத்தில் இருக்கிறாரா. இல்லை வேறு ஏதாவது குழப்பமா, யாருக்காவது மெசேஜ் சொல்ல நினைக்கிறாரா என கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால் ஐஸ்வர்யா தொடர்ந்து ஏதாவது ஒரு போஸ்ட் போட்டு வருகிறார். சமீபத்தில் தனது அனைத்து சோஷியல் மீடியா பக்கங்களில் இருந்து தனுஷின் பெயரை நீக்கி விட்டு, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என மாற்றி விட்டார்.

மகன் மடியில் ஐஸ்வர்யா

மகன் மடியில் ஐஸ்வர்யா

இந்நிலையில் இன்று, தனது மூத்த மகன் யாத்ரா மடியில் அமர்ந்தபடி இருக்கும் பிளாக் அன்ட் ஒயிட் போட்டோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஐஸ்வர்யா. அருகில் இளைய மகன் லிங்காவும் இருக்கிறார். இதோடு, Sons and sundays என்ற பதிவிட்ட ஐஸ்வர்யா, தனது ரசிகர்களிடமும் உங்களின் வார இறுதி எப்படி போகிறது என கேட்டுள்ளார்.

ஏதோ இடிக்குதே

ஏதோ இடிக்குதே

சன்டே மூட், வீக் என்ட் மூடிற்கும், மகன்களுடன் மடியில் அமர்ந்து போன்ற போட்டோவிற்கும் என்ன சம்பந்தம். எதற்காக ஐஸ்வர்யா இப்படி ஒரு போஸ்டை போட்டுள்ளார். இவரது கேப்ஷனை பார்த்தால் ஜாலியாக சன் மூடில் இருப்பதாக உள்ளது. ஆனால் போட்டோவில் மகனின் மடியில் சோகமாக அமர்ந்திருக்கிறாரே. மகன்ளுடன் இருக்கும் சந்தோஷமே அவரிடம் இல்லையே என பலர் கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X