தனுஷை பிரிந்த பிறகு வந்த புதுக்காதல்... நாளைக்கு தெரிஞ்சுடும்.. பூரிப்பில் ஐஸ்வர்யா
சென்னை : மறக்க முடியாத நினைவுகள்...நாளைக்காக காத்திருக்கிறோம் என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். தனுஷை பிரிந்த பிறகு அவருக்கு வந்த புதுக்காதலின் முடிவுகள் எப்படி இருக்கும் என நாளை தெரிந்து விடும்.
தனுஷை திருமணம் செய்த பிறகு இயக்குநர் அவதாரம் எடுத்த ஐஸ்வர்யா, தனது கணவரான தனுஷை வைத்து 3 படத்தை இயக்கினார். தொடர்ந்து வை ராஜா வை என்ற படத்தையும் சினிமா வீரன் என்ற டாக்குமென்ட்ரி படத்தையும் இயக்கியிருந்தார். ஐஸ்வர்யா இயக்குநராக மட்டுமின்றி டப்பிங் ஆர்ட்டிஸ்ட் மற்றும் பாடகியாகவும் உள்ளார்.

ஐஸ்வர்யாவின் புதிய காதல்
இந்நிலையில் ஜனவரி மாதம் கணவர் தனுஷை பிரிவதாக அறிவித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த், கணவரை பிரிந்த கையோடு முசாஃபிர் என்ற ஆல்பத்தை இயக்கி வருகிறார். முழுக்க முழுக்க காதல், ரொமான்ஸ் நிறைந்த இந்த ஆல்பத்தை ஹைத்ராபாத்தில் தங்கி நிறைவு செய்தார் ஐஸ்வர்யா. தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய 3 மொழிகளில் இந்த மியூசிக் வீடியோ மார்ச் 8 ம் தேதி வெளியாகும் என ஐஸ்வர்யா ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்த மியூசிக் வீடியோவை தமிழில் அனிருத் பாடி உள்ளார்.

நாளைக்காக காத்திருக்கிறோம்
இதுதொடர்பாக ஐஸ்வர்யா வெளியிட்டுள்ள பதிவில், நாளைக்காக ஆயத்தமாகிறேன்... எனது டீம்மின் அனைத்து உழைப்பும்.. அலறல்.. சிரிப்பு... பரபரப்பான வேலை.. மறக்க முடியாத நினைவுகள்.. நாங்கள் செய்ததை நாளை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள காத்திருக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார். அதோடு ஷுட்டிங் ஸ்பாட் BTS போட்டோக்களையும் ஐஸ்வர்யா பகிர்ந்துள்ளார்.

நீங்கள் பலருக்கு இன்ஸ்பிரேஷன்
ஐஸ்வர்யாவின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளை குவித்து வருகின்றனர். மேலும் நீங்கள் பலருக்கு இன்ஸ்பிரேஷன் என்றும் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். இதனிடையே முசாஃபிர் செட்டில் நடந்த சுவாரசிய சம்பவங்களையும் வீடியோவாக வெளியிட்டுள்ளார் ஐஸ்வர்யா. இது லைக்குகளை குவித்து வருகிறது.

கேமிரா அழகிகளுடன் ஐஸ்வர்யா
இதற்கு முன்பும் பிடிஎஸ் போட்டோக்களை வெளியிட்ட ஐஸ்வர்யா, கேமிராக்களை அழகிகள் என வர்ணித்திருந்தார். ஐஸ்வர்யாவின் காதல் மியூசிக் வீடியோ எப்படி வந்திருக்கிறது, அதற்கு ரசிகர்களின் ஆதரவு எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள அனைவரும் மிக ஆர்வமாக காத்திருக்கிறார்கள். ஐஸ்வர்யா, அப்பா ரஜினியை வைத்து ஒரு படம் எடுக்க போவதாக ஏற்கனவே தகவல் பரவியதால் அவரின் இந்த ரொமான்டிக் வீடியோ பற்றிய ஆர்வம் மிகவும் அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications











