ஐஸ்வர்யா ரஜினிகாந்த் போட்ட ஒத்த போஸ்ட்...வாயடைத்து போன தனுஷ் குடும்பம்
சென்னை : ஐஸ்வர்யா ரஜினிகாந்த் போட்ட ஒரு போஸ்ட்டால் தனுஷின் ஒட்டுமொத்த குடும்பமும் வாயடைத்து, நெகிழ்ந்து போய் உள்ளதாம். அதே சமயம் ரசிகர்கள் இதனை வரவேற்று, மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
நடிகர் தனுஷ் மற்றும் ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு 18 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் அனைவருக்கும் அதிர்ச்சி தரும் வகையில், இருவரும் பிரிய முடிவு செய்திருப்பதாக அறிவித்தனர்.

ரசிகர்கள் வைத்த கோரிக்கை
இவர்களின் பிரிவுக்கு என்ன காரணம் என பல தகவல்கள் சோஷியல் மீடியாக்களில் பரவின. இவர்கள் இருவரும் மீண்டும் ஒன்று சேர வேண்டும் என திரையலக பிரபலங்கள், ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் இவர்களை மீண்டும் ஒன்று சேர்க்க இரு குடும்பத்தினரும் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.

மெளனம் காக்கும் தனுஷ்–ஐஸ்வர்யா
ஆனால் பிரிவை அறிவித்த பிறகு அது பற்றி தனுஷ் இதுவரை மீடியாக்களிடம் ஏதும் பேசவில்லை. அடுத்தடுத்த பட ஷுட்டிங்கில் தனுஷ் பிஸியாக இருந்து வருகிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் வாத்தி, அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மாளவிகாவுடன் தனுஷ் நடித்த மாறன் படம் மார்ச் 11ம் தேதி ஹாட்ஸ்டாரில் ரிலீசாக உள்ளது. இதே போல் ஐஸ்வர்யாவும் முஷாஃபிர் என்ற மியூசிக் வீடியோவை 3 மொழிகளில் இயக்கி உள்ளார். இந்த வீடியோ மார்ச் 8 ம் தேதி வெளியாக உள்ளது.

ஐஸ்வர்யா போட்ட அந்த போஸ்ட்
இந்நிலையில் தனது மச்சானும், டைரக்டருமான செல்வராகவன் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு, செல்வராகவனை கட்டிப்பிடித்தபடி இருக்கும் போட்டோ ஒன்றை பகிர்ந்த ஐஸ்வர்யா அதோடு, ஹேப்பி பர்த் டே என்னுடைய குரு, ஃபிரண்ட், அப்பாவை போன்றவர், இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் என கேப்ஷனுடன் போஸ்ட் போட்டிருந்தார்.

நெகிழ்ந்து போன தனுஷ் குடும்பம்
தனுஷ் குடும்பத்தினர் மீது ஐஸ்வர்யா வைத்துள்ள இந்த மரியாதை மற்றும் பாசத்தை பார்த்து தனுஷ் மற்றும் செல்வராகவன் குடும்பத்தினரை மனதை உருக செய்து விட்டதாம். ஐஸ்வர்யாவின் இந்த போஸ்டை பார்த்த ரசிகர்களும், தனுஷ்-ஐஸ்வர்யா மீண்டும் சேருவதற்கு மற்றொரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











