»   »  ஐஸ்வர்யா ராய்க்கு என்னாச்சு, இப்படி கிளம்பிட்டாரே: பாலிவுட் பரபர

ஐஸ்வர்யா ராய்க்கு என்னாச்சு, இப்படி கிளம்பிட்டாரே: பாலிவுட் பரபர

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பிலிம்பேர் பத்திரிகையின் அட்டைப் படத்தில் பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன், நடிகர் ரன்பிர் கபூருடன் சேர்ந்து நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

கரண் ஜோஹார் இயக்கத்தில் வெளியாக உள்ள ஏ தில் ஹை முஷ்கில் படத்தில் ஐஸ்வர்யா ராய் பச்சனும், ரன்பிர் கபூரும் நெருக்கமாக நடித்துள்ள காட்சிகளால் பச்சன் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. சென்சார் போர்டே ஐஸ், ரன்பிர் இடையேயான 3 நெருக்கமான காட்சிகளை கத்தரித்துவிட்டது.

இந்நிலையில் ஐஸ்வர்யாவும், ரன்பிரும் மீண்டும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.

பிலிம்பேர்

பிலிம்பேர்

பிலிம்பேர் பத்திரிகையின் அக்டோபர் மாத பிரதியின் அட்டைப் படத்தில் ரன்பிர், ஐஸ்வர்யா நெருக்கமாக இருக்கும் புகைப்படம் உள்ளது. புகைப்படத்திற்கு அவர்கள் கொடுத்துள்ள போஸ் தான் பலரின் புருவங்களை உயர்த்த வைத்துள்ளது.

புகைப்படங்கள்

புகைப்படங்கள்

ஏற்கனவே ஏ தில் ஹை முஷ்கில் புகைப்படங்கள் பலரையும் அதிர வைத்துள்ள நிலையில் பிலிம்பேர் பத்திரிகைக்கு ரன்பிரும், ஐஸ்வர்யாவும் நெருக்கமாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் மேலும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா

பச்சன் குடும்பத்தில் இவ்வளவு பிரச்சனை ஏற்படக் காரணமாக உள்ள அந்த நெருக்கமான படுக்கையறை காட்சிகளை கேட்டு வாங்கி நடித்ததே ஐஸ்வர்யா ராய் என்பது அண்மையில் தெரிய வந்தது.

ரன்பிர்

ரன்பிர்

தன்னை விட மூத்தவரான ஐஸ்வர்யா ராயுடன் நெருக்கமாக நடித்ததில் சங்கடம் எதுவும் இல்லை என ரன்பிர் தெரிவித்துள்ளார். காதலுக்கு வயது முக்கியம் இல்லை என்கிறார் ரன்பிர்.

English summary
Aishwarya Rai Bachchan and Ranbir Kapoor's steamy photo is on the cover of Filmfare's october issue.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos