»   »  ஐஸ்வர்யா ராயின் அழகுக்குட்டிச் செல்லம் ஆரத்யா... கன்னடத்து ‘புஷ்பக விமான’த்தில் ஏறுகிறார்?

ஐஸ்வர்யா ராயின் அழகுக்குட்டிச் செல்லம் ஆரத்யா... கன்னடத்து ‘புஷ்பக விமான’த்தில் ஏறுகிறார்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: முன்னாள் உலக அழகியும், பிரபல நடிகையுமான ஐஸ்வர்யா ராயின் மகள் ஆரத்யா, கன்னடப் படமொன்றில் அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

1994ம் ஆண்டு உலக அழகியாக தேர்வு செய்யப்பட்ட ஐஸ்வர்யா ராய், 1997ம் ஆண்டு மணிரத்னத்தின் இயக்கத்தில் இருவர் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து தமிழ், இந்தி, தெலுங்கு, பெங்காலி மற்றும் ஹாலிவுட் படங்களில் நடித்த ஐஸ்வர்யா ராய், 2007ம் ஆண்டு அமிதாப் பச்சனின் மகனும், நடிகருமான அபிஷேக் பச்சனின் மனைவியானார்.

ஆரத்யா...

ஆரத்யா...

இந்தத் தம்பதிக்கு தற்போது ஆரத்யா என்ற பெண் குழந்தை உள்ளது. குழந்தையை வளர்ப்பதற்காக சிறிது காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்த ஐஸ்வர்யா ராய், ஜஸ்பா படத்தின் மூலம் தனது அடுத்த ரவுண்டைத் துவக்கியுள்ளார்.

கன்னடத்தில்...

கன்னடத்தில்...

இந்நிலையில், ஆரத்யாவும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக இருப்பதாக பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், அம்மா ஐஸ்வர்யாவைப் போல் தமிழிலோ அல்லது இந்தியிலோ இல்லாமல் கன்னடப் படத்தில் அவர் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

அம்மாவின் தாயகத்தில்..

அம்மாவின் தாயகத்தில்..

அது ஏன் கன்னட அறிமுகம் எனக் குழம்புகிறதோ, கர்நாடக மாநிலம் மங்களூரைச் சேர்ந்தவர் தான் ஆரத்யாவின் அம்மாவான ஐஸ்வர்யா ராய்.

தாத்தா நடிச்சிருக்காரே..

தாத்தா நடிச்சிருக்காரே..

ஆரத்யாவின் தாத்தாவான அமிதாப் பச்சன் ஏற்கனவே கன்னடத்தில் அமிர்ததாரே என்ற படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புஷ்பக விமானம்...

புஷ்பக விமானம்...

இந்த சூழலில் தான் ரமேஷ் அரவிந்த் நடிக்க இருக்கும் புஷ்பக விமானம் கன்னட படத்தில் ஆரத்யா குழந்தை நட்சத்திரமாக நடிக்க பிக் பி குடும்பத்தாரிடம் பேச்சுவார்த்தை நடந்துள்ளதாம். அமிதாப் குடும்பத்திற்கு கதை பிடித்து விட்டதால், ஆரத்யா அப்படத்தில் நடிப்பது ஏறக்குறைய உறுதி ஆகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

5 நாள் கால்ஷீட்...

5 நாள் கால்ஷீட்...

இந்தப் படத்திற்காக ஆரத்யா ஐந்து நாட்கள் கால்ஷீட் கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக சினிமா உலகம் காத்திருக்கிறது.

கமல் படத் தலைப்பு..

கமல் படத் தலைப்பு..

புஷ்பக விமானம் என்ற தலைப்பில் ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன்பு கமல், அமலா நடித்துள்ளனர் என்பது நினைவிருக்கலாம். வசனமே இல்லாத இப்படம் தமிழில் பேசும் படம் என்ற பெயரில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

கன்னடத்தில் அறிமுகமாகி விட்டால், அப்படியே கூடிய சீக்கிரம் ஆரத்யா தமிழிலும் தரிசனம் தருவார் என நிச்சயமாக எதிர்பார்க்கலாம்.

English summary
According the speculations in Gandhinagara, Aaradhya Bachchan, daughter of Aishwarya-Abhishek will debut in Kannada film industry through Ramesh Aravind starrer Pushpaka Vimana.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil