»   »  தனுஷுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஐஸ்வர்யா

தனுஷுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஐஸ்வர்யா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தான் ஒரு எழுத்தாளர் ஆனது தன் கணவருக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்ததாக ஐஸ்வர்யா தனுஷ் தெரிவித்துள்ளார்.

நடிகர் தனுஷின் மனைவி ஐஸ்வர்யா தனது வாழ்க்கை வரலாற்றை ஸ்டாண்டிங் ஆன் என் ஆப்பிள் பாக்ஸ் என்ற பெயரில் புத்தகமாக எழுதியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

புத்தகம்

புத்தகம்

எனக்கு எழுதும் பழக்கம் உண்டு. நிறைய எழுதுவேன். ஆனால் புத்தகம் எழுத வேண்டும் என திட்டமிடவில்லை. அதுவாக நடந்தது. என் புத்தகத்தை படித்து பார்த்து குடும்பத்தார் மகிழ்ச்சி அடைந்தனர்.

குடும்பம்

குடும்பம்

எனக்கு நல்ல குடும்பம் அமைந்துள்ளது. அவர்களின் முழு ஆதரவும் உள்ளது. நான் வெளியூருக்கு சென்றால் என் அம்மா என் குழந்தைகளை பார்த்துக் கொள்வார். என் கணவர் எனக்கு ஃபுல் சப்போர்ட்.

தனுஷ்

தனுஷ்

என் தந்தை ரஜினியும் சரி, கணவர் தனுஷும் சரி என்னை நினைத்து பெருமைப்படுகிறார்கள். நான் எழுத்தாளர் ஆவேன் என என் தந்தைக்கு தெரியும் என நினைக்கிறேன். அதனால் இது அவருக்கு புதிது அல்ல. நான் 180 பக்கங்கள் கொண்ட புத்தகம் எழுதியுள்ளேன் என்பது தனுஷுக்கு தான் இன்ப அதிர்ச்சி.

ஜோக்ஸ்

ஜோக்ஸ்

என் தந்தை பற்றி வரும் நிறைய ஜோக்குகள் எனது செல்போனுக்கும் வரும். அதை என் தந்தையும் படித்துப் பார்த்து சிரிப்பார். அதை அவர் சீரியஸாக எடுத்துக் கொண்டது இல்லை.

English summary
Aishwarya Dhanush said that her new avatar as a writer is a pleasant surprise to husband Dhanush.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil