»   »  ‘சீனியர்’ தனுஷ் எனக்கு மிகப்பெரிய வழிகாட்டி: ஐஸ்வர்யா தனுஷ் மகிழ்ச்சி

‘சீனியர்’ தனுஷ் எனக்கு மிகப்பெரிய வழிகாட்டி: ஐஸ்வர்யா தனுஷ் மகிழ்ச்சி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனது கணவர் தனக்கு மிகப்பெரிய வழிகாட்டியாக இருப்பதாக தெரிவித்துள்ளார் சூப்பர்ஸ்டார் ரஜினியின் மூத்த மகளும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ்.

‘3' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார் ஐஸ்வர்யா தனுஷ். இப்படத்தில் தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடித்திருந்தனர். இப்படத்தில் இடம் பெற்றிருந்த ‘ஒய் திஸ் கொலைவெறி' பாடல் உலக அளவில் பிரபலமாகி, இசையமைப்பாளர் அனிருத்திற்கு பாராட்டுகளைப் பெற்றுத் தந்தது.

இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஐஸ்வர்யா தனுஷ் இயக்கியுள்ள படம் வை ராஜா வை. இப்படத்தில் கௌதம் கார்த்திக் நாயகனாவும், பிரியா ஆனந்த் நாயகியாகவும் நடித்துள்ளார்கள். யுவன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டன. காமெடி கலந்த பொழுதுபோக்கு படமாக உருவாகும் இப்படம் அடுத்த வருடம் திரைக்கு வரவிருக்கிறது.

இந்நிலையில், தனது வை ராஜா வை படம் குறித்து ஐஸ்வர்யா தனுஷ் பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது :-

புது முயற்சி...

புது முயற்சி...

நான் முதல் படம் இயக்கும்போது அதிக தீவிரம் காட்டவில்லை. ஆனால் அடுத்தப் படத்தில் எதாவது புது முயற்சியாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதற்காக புது முயற்சிகளை எடுத்து வருகிறேன்.

ரொம்ப பிசி...

ரொம்ப பிசி...

நானும் தனுஷும் பட வேலைகளில் பிசியாக இருப்பதால் வீட்டில் பேசிக்கொள்வது சிறிது நேரம் தான். ஆனால், தனுஷுக்கு என்னுடைய படத்தின் கதை தெரியும்.

வழிகாட்டி...

வழிகாட்டி...

இவர் என்னுடைய சீனியர் மற்றும் எனக்கு மிகப்பெரிய வழிகாட்டியாகவும் இருக்கிறார். மேலும் நிறைய உதவிகளையும் செய்திருக்கிறார்.

மகிழ்ச்சி...

மகிழ்ச்சி...

இவர் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். இதை படமாக்கும் போது எனக்கு பெரும் மகிழ்ச்சியாக இருந்தது' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

English summary
“VRV is a fast-paced commercial entertainer. It is not as serious and intense as my debut film, 3. I wanted to try something different this time. I feel that it is going to be something new for Tamil cinema as a whole,” Aishwarya says with a smile.
Please Wait while comments are loading...