»   »  ஐஸ்வர்யா ராய் இடத்தில் நான் இருந்திருந்தால் 'அப்படி' செய்திருக்க மாட்டேன்: ஜஸ்பா இயக்குனர்

ஐஸ்வர்யா ராய் இடத்தில் நான் இருந்திருந்தால் 'அப்படி' செய்திருக்க மாட்டேன்: ஜஸ்பா இயக்குனர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ஐஸ்வர்யா ராய் தனது மகளுக்கு உடல்நலம் சரியில்லாத போதிலும் அவரை வேனில் படுக்க வைத்துவிட்டு படப்பிடிப்பில் கலந்து கொண்டதாக ஜஸ்பா பட இயக்குனர் சஞ்சய் குப்தா தெரிவித்துள்ளார்.

கர்ப்பம், குழந்தை என்றான பிறகு ஐஸ்வர்யா ராய் பச்சன் படங்களில் நடிக்காமல் இருந்தார். மகள் ஆராத்யாவுடன் நேரம் செலவிடுவதற்காக அவர் படங்களில் நடிக்காமல் வந்த வாய்ப்புகளை எல்லாம் தட்டிக்கழித்தார். இந்நிலையில் ஆராத்யா ஓரளவுக்கு வளர்ந்துவிட்டதால் மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கியுள்ளார் ஐஸ்.

அவர் சஞ்சய் குப்தாவின் ஜஸ்பா படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் ஐஸ் பற்றி சஞ்சய் கூறுகையில்,

தாய்

தாய்

ஐஸ்வர்யா ராய் அருமையான அம்மா ஆவார். அவர் மகளையும் பார்த்துக் கொண்டு படப்பிடிப்பிலும் கலந்து கொண்டு வந்தார்.

ஆராத்யா

ஆராத்யா

படப்பிடிப்பு நடந்தபோது ஆராத்யாவின் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தது. இது குறித்து அறிந்த நான் படப்பிடிப்பை ரத்து செய்துவிடலாம் என்றேன். ஆனால் ஐஸ்வர்யாவோ அதெல்லாம் வேண்டாம் என்று கூறிவிட்டார்.

படப்பிடிப்பு

படப்பிடிப்பு

இரவு 3 மணிக்கு நாங்கள் எல்லாம் படப்பிடிப்பில் இருந்தோம். அப்போது ஐஸ்வர்யாவின் உதவியாளர் ஓடிவந்து அவர் தற்போது வாந்தி எடுத்தார் என்றார். யார் வாந்தி எடுத்தது என்று நான் கேட்டேன். அதற்கு ஐஸின் உதவியாளர் ஆராத்யா என்று பதில் அளித்தார்.

வேன்

வேன்

ஐஸின் உதவியாளர் தெரிவித்த பிறகே ஆராத்யா வேனில் இருப்பது எங்களுக்கு தெரிய வந்தது. ஐஸ்வர்யாவின் குடும்பத்தார் வெளியூர் சென்றிருந்தனர். அதனால் அவர் படப்பிடிப்பு பாதிக்காமல் இருக்க உடல்நலம் சரியில்லாத ஆராத்யாவை வேனில் படுக்கவைத்துவிட்டு நடிக்க வந்துள்ளார்.

நானாக இருந்திருந்தால்

நானாக இருந்திருந்தால்

ஐஸ்வர்யா இடத்தில் நான் இருந்திருந்தால் படப்பிடிப்பை ரத்து செய்திருப்பேன். உடல்நலம் பாதிக்கப்பட்ட குழந்தையை வேனில் படுக்க வைத்துவிட்டு யாரும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள மாட்டார்கள். இதன் மூலம் ஐஸ்வர்யாவின் அர்ப்பணிப்பு தெரிகிறது என்கிறார் சஞ்சய்.

English summary
Jazbaa director Sanjay Gupta told that Aishwarya Rai left her unwell child Aaradhya in the van and came for the shooting of the film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil