»   »  'தந்தையின் ஆசி.. கணவரின் உறுதுணை... வை ராஜா வை நிச்சயம் வெல்லும்' -ஐஸ்வர்யா தனுஷ்

'தந்தையின் ஆசி.. கணவரின் உறுதுணை... வை ராஜா வை நிச்சயம் வெல்லும்' -ஐஸ்வர்யா தனுஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

வை ராஜா வை படத்தை முடித்து ரிலீசுக்குக் கொண்டு வந்துவிட்டார் ஐஸ்வர்யா தனுஷ். அதுவும் கமலின் உத்தம வில்லனுடன் இந்தப் படம் மோதப் போவதுதான் ஹைலைட்.

தன் படத்தின் மீது அந்த அளவு அபார நம்பிக்கை வைத்திருக்கிறார் ஐஸ்வர்யா.


நேற்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, இந்தப் படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்ததிலிருந்து ரிலீஸ் வரையிலான நிகழ்வுகளைப் பகிர்ந்து கொண்டார்.


இனி ஐஸ்வர்யா பேசியதிலிருந்து...


கமர்ஷியல் த்ரில்லர்

கமர்ஷியல் த்ரில்லர்

நான் இயக்கிய ‘3' படம் காதல் கதை. ‘வை ராஜா வை' முழுக்க கமர்ஷியல்தான். திரில்லரும் இருக்கும். உளவியல் சம்பந்தப்பட்ட கதைகளில் எனக்கு ஆர்வம் உண்டு. இந்த படத்திலும் அந்த விஷயம் இருக்கும்.


ஆடம்பரக் கப்பலில்

ஆடம்பரக் கப்பலில்

படத்தின் ஒரு பகுதி படப்பிடிப்பை ஆடம்பரக் கப்பலில் நடத்தினோம். அது சவாலாக இருந்தது. ஏ.ஜி.எஸ். பட நிறுவனம் என் மேல் நம்பிக்கை வைத்து கதைக்கு தேவையான செலவை தாராளமாக செய்தார்கள்.


வித்தியாசமானது

வித்தியாசமானது

தமிழ் சினிமாவில் இந்த கதை வித்தியாசமானது. யுவன்சங்கர் ராஜாவின் பின்னணி இசையும் வேல்ராஜ் ஒளிப்பதிவு படத்துக்கு பெரிய பலமாக அமைந்துள்ளன.


விவேக் - எஸ் ஜே சூர்யா

விவேக் - எஸ் ஜே சூர்யா

நான் விவேக் ரசிகை. அவர் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் வருகிறார். எஸ்.ஜே.சூர்யா ஒரு பாடலுக்கு ஆடுகிறார். இயக்குநர் வசந்தும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.


தந்தை ஆசி, கணவர் ஆதரவு

தந்தை ஆசி, கணவர் ஆதரவு

தனுஷ் எனக்கு உதவியாக இருக்கிறார். அவர் ஆதரவு இல்லாமல் இந்தப் படத்தை நான் இயக்கி இருக்க முடியாது. உற்சாகம் அளித்து இயக்க வைத்தார். என் வெற்றிக்கு பக்கபலமாக இருக்கிறார். என் தந்தையின் ஆசியும் இருக்கிறது. இருவரும் படத்தைப் பார்த்து பாராட்டினார்கள்.


பெண் இயக்குநர்களை ஒதுக்காதீர்கள்

பெண் இயக்குநர்களை ஒதுக்காதீர்கள்

பெண் இயக்குநர்கள் படங்களில் இந்தியில் முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள். அதுபோல் இங்குள்ள கதாநாயகர்களும் பாகுபாடு பார்க்காமல் பெண் இயக்குநர்கள் படங்களில் நடிக்க முன் வர வேண்டும். அப்போதுதான் மாறுபட்ட படங்கள் வெளியாகும்," என்றார்.


English summary
Director Aishwarya Dhanush shared her experience in Vai Raja Vai movie with media persons.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil