அப்பாவிற்காக பிரார்த்தனை செய்த... நல்உள்ளங்களுக்கு நன்றி... ஐஸ்வர்யா தனுஷ் நெகிழ்ச்சி !

சென்னை : அப்பா நலமுடன் இருக்க பிரார்த்தனை செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி என்று ஐஸ்வர்யா தனுஷ் கூறியுள்ளார்.

ரஜினிகாந்த் அவர்களுக்கு கடந்த 28ந் தேதி தலைசுற்றல் மற்றும் மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, காவேரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி வெளியானதை அடுத்து அவரது ரசிகர்கள் மிகுந்த துயரத்தில் ஆழ்ந்தனர். அவர் விரைவில் குணமடைய வேண்டி அங்காங்கே பிரார்த்தனைகள் நடைபெற்றன.

சிறு அறுவைசிகிச்சை

சிறு அறுவைசிகிச்சை

மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டிருந்ததாகவும், அறுவை சிகிச்சை மூலம் அந்த அடைப்பு அகற்றப்பட்டதாகவும் மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்தது. மேலும், அவர் பூரண உடல்நலத்துடன் உள்ளார் என்றும் இன்னும் சில நாட்களில் அவர் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை சார்பில் கூறப்பட்டது.

வீடு திரும்பினார்

வீடு திரும்பினார்

இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை இரவு 10.30 மணி அளவில் அவர் ரஜினிகாந்த் வீடு திரும்பினார். அவரை அவரது மனைவி லதா, ஆரத்தி எடுத்து வரவேற்றார். அவர் வீடு திரும்பி புகைப்படங்கள் இணையத்தில் மிகக்பெரிய அளவில் வைரலாகின . இதையடுத்து, ஹூட் ஆப் மூலம் குரல் பதிவை வெளியிட்ட ரஜினி. அதில், சிகிச்சை முடிந்தது, நான் நன்றாக இருக்கிறேன். இன்று இரவு வீடு திரும்பினேன். எனது ஆரோக்கியத்திற்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் மற்றும் எனது உடல்நலம் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி. என கூறியிருந்தார்.

ஐஸ்வர்யா தனுஷ்

ஐஸ்வர்யா தனுஷ்

இந்நிலையில், அவரது மகள் ஐஸ்வர்யா தனுஷ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அப்பா நலமுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்க பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என்றார். மேலும், தனது கையில் தழும்பை சுட்டிக்காட்டி, தழும்புகள் மற்றும் காயங்கள் பலவற்றை நினைவூட்டும். ஆனால் அவற்றை இதயத்துக்குள் ஒருபோதும் அனுமதிக்காதீர்கள்.

அனைவருக்கும் நன்றி

அனைவருக்கும் நன்றி

உலகம் முழுவதும் உள்ள அன்பாலும், பிரார்த்தனைகளாலும் அப்பா உடல் நலம் தெறி வீட்டிற்கு வந்துள்ளார். அப்பாவிற்காக பிரார்த்தனை செய்த ஒவ்வொருவருக்கும் என் உள்ளத்திலிருந்து நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அந்த பதிவில் ஐஸ்வர்யா தனுஷ் பகிர்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X