Don't Miss!
- News
அடுக்குமாடி குடியிருப்பில் பற்றிய திடீர் தீ! உடல் கருகி இறந்த 14 பேர்.. ஜார்க்கண்ட்டில் சோகம்
- Automobiles
நம்மல மாதிரி கொடுத்து வச்சவங்க யாருமே இல்ல.. போட்டி போட்டுட்டு இந்த பிப்ரவரில காரை அறிமுகம் செய்ய போறாங்க!
- Lifestyle
Today Rasi Palan 01 February 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் முக்கிய வேலை பாதியில் தடைபடலாம்...
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Technology
தரமான 5G ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! என்னென்ன அம்சங்கள்?
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
நம்ம ரெகுலர் வாழ்க்கையில இருந்து பிரேக் எடுக்கறது முக்கியம்.. ஐஸ்வர்யா எங்கே போயிருக்காங்க தெரியுமா?
சென்னை : இயக்குநரும் நடிகர் ரஜினியின் மூத்த மகளுமான ஐஸ்வர்யா ரஜினி அடுத்ததாக பாலிவுட்டில் படமியக்கவுள்ளார்.
நடிகர் தனுஷுடனான பிரிவிற்கு பிறகு தன்னுடைய படம் குறித்த அறிவிப்பை ஐஸ்வர்யா வெளியிட்டிருந்தார்.
தொடர்ந்து தன்னுடைய வொர்க் அவுட் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.
யாஷிகாவை
அப்படியே
காப்பி
அடிக்கும்
ஐஸ்வர்யா
தத்தா...வச்சு
செய்யும்
நெட்டிசன்கள்

இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினி
3, வை ராஜா வை போன்ற படங்களை இயக்கியவர் ஐஸ்வர்யா ரஜினி. தொடர்ந்து படங்களை இயக்காமல், தன்னுடைய குடும்பம் மற்றும் குழந்தைகள் என இவர் தன்னை பிசியாக்கிக் கொண்டார். ஆனால் தனுஷுடனான விவாகரத்து முடிவு இவருக்கு தன்னுடைய கேரியர் குறித்த கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.

தனுஷுடனான விவாகரத்து முடிவு
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தங்களின் 18 ஆண்டுகால திருமண வாழ்க்கையை முறித்துக் கொள்ளும் முடிவை தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் எடுத்தனர். இதனால் ஒட்டுமொத்த திரையுலகமே அதிர்ச்சிக்குள்ளானது. இவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க முயன்ற குடும்பத்தினரின் முயற்சியும் வீணானது.

பாலிவுட்டில் படமியக்கும் ஐஸ்வர்யா
இதனிடையே தற்போது தன்னுடைய கேரியரில் கவனத்தை திருப்பியுள்ளார் ஐஸ்வர்யா ரஜினி, தமிழில் சிம்பு, ராகவா லாரன்ஸ் போன்றவர்களை வைத்து இவர் படம் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் பாலிவுட்டில் தனது படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் ஐஸ்வர்யா ரஜினி.

வொர்க் அவுட் வீடியோக்கள்
இதனிடையே விவாகரத்து முடிவையடுத்து தன்னுடைய கேரியர் மட்டுமில்லாமல், தன் மீதான கவனத்தையும் அதிகரித்துள்ளார். மீண்டும் தன்னுடைய வொர்க் அவுட்டை அதிகரித்துள்ளார். அதன் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இவர் வெறித்தனமாக செய்து வரும் வொர்க் அவுட்கள் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.

ஐஸ்வர்யா டெல்லி பயணம்
இதனிடையே தற்போது டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார் ஐஸ்வர்யா ரஜினி. நம்முடைய ரெகுலர் வாழ்க்கையில் இருந்து நாம் கேப் எடுத்துக் கொண்டு நம்மை நல்லது என்று கூறியுள்ள அவர், தான் 10 கிலோ மீட்டருக்கு வாக்கிங் மற்றும் ஜாக்கிங் செய்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

டெல்லியில் ஜாக்கிங் வீடியோ
டெல்லியில் தன்னுடைய காலைப்பொழுது ஜாக்கிங்குடன் சிறப்பாக அமைந்ததாகவும் அவர் கேப்ஷனில் தெரிவித்துள்ளார். அவரைப் பார்க்கும் ரசிகர்கள், தங்களுக்கும் அந்த எனர்ஜி பற்றிக் கொள்வதாக கமெண்ட் செய்து வருகின்றனர். ராதிகா சரத்குமார் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும் அவரது இந்த வீடியோவை லைக் செய்துள்ளனர்.