»   »  தனுஷுக்கு ஏற்பட்ட அதே அவமானம் சிங்கத்திற்கும் ஏற்பட்டதாம்

தனுஷுக்கு ஏற்பட்ட அதே அவமானம் சிங்கத்திற்கும் ஏற்பட்டதாம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தான் நடிக்க வந்த புதிதில் தன்னை பார்த்து பலரும் கிண்டல் செய்ததாக பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் தெரிவித்துள்ளார்.

நடிகரும், பாலிவுட் நடிகை கஜோலின் கணவருமான அஜய் தேவ்கன் தான் நடிக்க வந்த புதிதில் நடந்த சம்பவம் குறித்து பிரபல நடிகை ராணி முகர்ஜியிடம் தெரிவித்துள்ளார்.

அஜய் ராணியிடம் கூறியதாவது,

சினிமா

சினிமா

நான் நடிக்க வந்த புதிதில் என்னை பார்த்தவர்கள் இவர் பார்க்க ரொம்பவே சுமாராக இருக்கிறார். இவர் இந்த துறையில் நிச்சயம் நிலைத்து நிற்க மாட்டார் என்றார்கள்.

அஜய்

அஜய்

இந்த ஆள் ஹீரோ மெட்டீரியலே கிடையாது. இவரால் நிச்சயம் வெற்றி பெற முடியாது என்றார்கள். இதை எல்லாம் கேட்ட நான் அது எதற்கும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

விமர்சனம்

விமர்சனம்

நடிப்பால் நான் வாழ்க்கையில் முன்னேறி வந்தேன். மற்றவர்களும் தங்களை பற்றி பிறர் சொல்லும் குறைகளை கண்டுகொள்ளாமல் வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.

கதாபாத்திரம்

கதாபாத்திரம்

நம் வயதுக்கு ஏற்ற கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும். வயதான பிறகு இளமையான கதாபாத்திரத்தில் நடித்து நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ள கூடாது. குறிப்பிட்ட வயதுக்கு பிறகு இளமையான கதாபாத்திரங்களில் நடித்தால் அதற்கு வலுவான காரணம் இருக்க வேண்டும் என்றார் அஜய்.

கேலி

கேலி

தனுஷ் நடிக்க வந்த புதிதில் படப்பிடிப்பு தளங்களில் கூடிய மக்கள் தன்னை பார்த்து இவன் எல்லாம் நடிக்க வந்துவிட்டான் என்று கூறி சிரித்ததை கேட்டு வேதனை அடைந்ததாக தெரிவித்தார். அஜய் தேவ்கனுக்கும் அது போன்றே நடந்துள்ளது.

English summary
Bollywood actor Ajay Devgan said, "When I had started out in the industry, there was this huge buzz that he is a very ordinary looking guy and he won't make it."

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X