»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் நடிகர் அஜித்துக்கு மீண்டும் தண்டுவடத்தில் அடிபட்டது.அவர் அப்பல்லோ மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்.

நடிகராவதற்கு முன் பைக் ரேசில் வல்லவராகத் திகழ்ந்தவர் அஜித்.

அப்போது ஏற்பட்ட விபத்தில் அவருக்கு தண்டுவடத்தில் பலமாக அடிபட்டது.

நடிகரான பின் வாலியில் வல்லமை காட்டும் போது வலியெடுத்தது.பிறகு சிகிச்சை பெற்று குணமடைந்தார்.

அதனால்தான் நடனகாட்சிகளில் 2 கைகளை மட்டுமே அசைத்து, நேர்த்தியாக டான்ஸ் செய்கிறார் என்று சொல்லப்படுகிறது.

பூவெல்லாம் உன் வாசம் படப்பிடிப்பின் போது, சண்டைக்காட்சியில் எதிரிகளை துவம்சம் செய்ய டூப் வைக்க வேண்டாம் நானே சிறந்த பைட்டர்என்று அடம்பிடித்தார்.

அவ்வாறு 6 பேர் கொண்ட கும்பலை தனியாளாகத் தாக்க முற்பட்டபோது, அஜித் நிலை தடுமாறி தானும் விழுந்ததால் அஜித்துக்கு தண்டுவடத்தில்அடிபட்டது. உடனே அவர் அப்பல்லோ மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டார்.

முடிவில் அந்த 6 பேருக்கும் உண்மைக் காயம் ஏற்பட்டு மற்றொரு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil