»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகர் அஜீத் மற்றும் நடிகர் பிரசாந்தின் வீடுகளில் வருமான வரித்துறையினர் திடீர் ரெய்ட் நடத்தினர். அவர்களின் வீடுகளில் இருந்து பலகோடி மதிப்புள்ள சொத்துக்கள் குறித்த ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

இந்தச் சோதனைகள் நேற்று நடந்துள்ளன. ஆனால், உடனடியாக தகவல் வெளியாகவில்லை. அஜீத்திடமும் பிரசாந்திடமும் அதிகாரிகள்விசாரணையும் நடத்தினர்.

இதனால், நேற்று அஜீத் தனது சூட்டிங்கை கேன்சல் செய்தார். தரமணியில் நடந்து வரும் தனது அடுத்த படத்தின் சூட்டிங்கில் அஜீத் நேற்றுகலந்து கொள்ளவில்லை.

அஜீத் விட்டிலிருந்து அவரது சொத்துக்கள், முதலீடுகள் குறித்த பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

நடிகர் பிரசாந்த் ஸ்டார் நைட்ஸ் என்ற பெயரில் பல வெளிநாடுகளில் நிகழ்ச்சிகள் நடத்தி கோடிணக்கணக்கில் பணம் பார்த்துள்ளார். இதுகுறித்த கணக்கு வழக்குகளை பிரசாந்த் மறைத்திருப்பதாகத் தெரிகிறது. பிரசாந்த் வீட்டிலிருந்து பெரும் அளவில் பணமும்கைப்பற்றப்பட்டுள்ளது.

ஸ்டார் நைட்ஸ் நிகழ்ச்சியின் வரவுகள், இதில் பங்கேற்ற பிற நடிகர், நடிகைகள் வாங்கிய பணம் தொடர்பான விவரங்கள் அடங்கியடைரிகளையும் வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil