»   »  அட்லீக்காக... மீண்டும் அஜீத்துடன் கை கோர்க்கும் அமிதாப்... ‘உல்லாசம்’ தருமா?

அட்லீக்காக... மீண்டும் அஜீத்துடன் கை கோர்க்கும் அமிதாப்... ‘உல்லாசம்’ தருமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அட்லீ இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள புதிய படத்தை பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தெறி பட வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் அட்லீ, அஜித்தை இயக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.

இந்நிலையில், அஜீத்தின் 58வது படமாக உருவாக உள்ள அப்படத்தை அமிதாப் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

உல்லாசம்...

உல்லாசம்...

ஏற்கனவே கடந்த 1996ம் ஆண்டு அஜித், விக்ரம் இணைந்து நடித்த உல்லாசம் படத்தை அமிதாப்பின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ஏபிசிஎல் தயாரித்தது. ஆனால், அப்படம் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை.

கடன்...

கடன்...

அதனைத் தொடர்ந்து அமிதாப் தயாரித்த அனைத்துப் படங்களும் தோல்வியடைந்தன. இதனால் பெரும் கடனாளியான அமிதாப்பின் வீடு ஜப்திக்கு வந்தது. இதனால் படம் தயாரிக்கும் கனவை மூட்டை கட்டிய அமிதாப், மீண்டும் போராடி ஜெயித்து கடனில் இருந்து மீண்டார்.

அட்லீ படம்...

அட்லீ படம்...

இந்நிலையில், தற்போது அட்லீ இயக்கத்தில் அஜித் நடிப்பதற்கான பட வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இது தொடர்பாக அமிதாப்பை தொடர்பு கொண்ட அஜித், தனது புதிய படம் குறித்து பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அந்த படத்தை அமிதாப் தயாரிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டதாகவும் தெரிகிறது.

சம்மதம்...

சம்மதம்...

அதனைத் தொடர்ந்து தற்போது தமிழில் அஜித் பட வசூல் நிலவரம் குறித்து விசாரித்துள்ளார் அமிதாப். கிடைத்த தகவல்கள் மனதிற்கு திருப்தியாக அமையவே மீண்டும் அஜித் படத்தை தயாரிக்க ஓகே சொல்லிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

English summary
The past week there were unconfirmed reports doing the rounds in Kollywood that Atlee the director of Vijay’s blockbuster movie ‘Theri’ is going to helm ‘Thala 58’. Now further reports from the same quarters hint that Bollywood Superstar Amitabh Bachan is going to produce ‘Thala 58’.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil