Don't Miss!
- News
சென்சார் பூட்டு உடைப்பு..தொழிலதிபர் வீட்டில் 300 சவரன் நகை கொள்ளை..திருவெறும்பூரில் பகீர் சம்பவம்
- Lifestyle
உங்க பர்ப்யூம்கள் நீண்ட நேரம் உங்களை வாசனையாக உணர வைக்க இத பண்ணுங்க போதும்...!
- Finance
பட்ஜெட்-க்கு முன் வரும் பொருளாதார ஆய்வறிக்கை.. இது ஏன் ரொம்ப முக்கியம் தெரியுமா..?
- Sports
விராட் கோலிக்கு மீண்டும் ஒரு வீக்னஸ்.. தொடர்ச்சியாக ஒரே முறையில் அவுட்.. வசீம் ஜாஃபர் எச்சரிக்கை!
- Technology
ரூ.6,999க்கு அறிமுகமான ஸ்மார்ட்போன்! 124 மணிநேர பேட்டரி ஆயுள்.. இது எப்படி இருக்கு?
- Automobiles
அவ்வளவு காசு வைத்திருந்தும் மாடிஃபைடு கார்களை பயன்படுத்தும் இந்திய விஐபி-கள்!! இவ்வளவு பேர் இருக்காங்களா?
- Travel
இந்திய எல்லையில் இவ்வளவு அழகிய சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றனவா – இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
கோலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸ் கிங் யாரு? இதுவரை நேரடியாக மோதிய விஜய் vs அஜித்.. அதிக வெற்றி யாருக்கு?
சென்னை: வாரிசு மற்றும் துணிவு படங்கள் இந்த பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில், இதுவரை நடிகர் அஜித் மற்றும் விஜய் நேரடியாக மோதியதில் யார் அதிக வெற்றி பெற்றுள்ளனர் என்றும் இந்த பொங்கலுக்கு யார் வெற்றி பெறுவார்கள் என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.
1996ல் இருந்து 2022 வரை ஏகப்பட்ட முறை அஜித் மற்றும் விஜய் நேரடியாக மோதி உள்ளனர். அதே போல பொங்கலுக்கும் கிளாஷ் மிகப்பெரிய அளவில் நடந்துள்ளது.
அஜித் மற்றும் விஜய் சரிசமமாக வெற்றிகளையும் தோல்விகளையும் கொடுத்துள்ளனர். இந்த முறை எப்படி இருக்கப் போகுது என்பதை பார்க்கும் முன்னர் இதுவரை எத்தனை முறை யார் யார் எப்போ வெற்றி பெற்றுள்ளனர் என்பதை இங்கே பார்ப்போம்..
வாரிசு, துணிவு ஒரே நாளில் ரிலீஸ்... FDFS எப்போது... மெயின் ஸ்க்ரீன் யாருக்கு?: பரபரப்பில் ரசிகர்கள்

வான்மதி vs கோயம்புத்தூர் மாப்பிள்ளை
1996-ல் அஜித் படமும் விஜய் படமும் ஒரே சமயத்தில் முதல் முறையாக பொங்கல் பண்டிகையின்போது கிளாஷ் விட்ட நிலையில் இரு படங்களும் வெற்றி பெற்றன. விஜய்யின் கோயம்புத்தூர் மாப்பிள்ளை படம் ஜனவரி 15ஆம் தேதியும், அஜித்தின் வான்மதி படம் ஜனவரி 12ஆம் தேதியும் வெளியானது. இந்த இரண்டு படங்களுமே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி அடைந்தன. இதில் அஜித்தின் வான்மதி படம் மட்டும் திரையரங்குகளில் 150 நாட்களைக் கடந்தது.

கல்லூரி வாசல் vs பூவே உனக்காக
அந்த ஆண்டே அடுத்து அடுத்து விஜய் அஜித் நேரடியாக மோதினர். பூவே உனக்காக திரைப்படம் பிப்ரவரி 15 அன்று வெளியாக, அஜித்தின் கல்லூரி வாசல் பிப்ரவரி 18ஆம் தேதி வெளியானது. ஆனால் கல்லூரி வாசல் திரைப்படத்தில் பிரசாந்த் ஹீரோவாக நடிக்க, அஜித் அப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். விஜய்யின் பூவே உனக்காக படம் அந்த ஆண்டு மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட்டாக மாறியது.

காலமெல்லாம் காத்திருப்பேன் vs நேசம்
அடுத்தடுத்த கிளாஷ்களை கொடுத்து தமிழ் சினிமாவின் இளம் நம்பிக்கை நட்சத்திரங்களாக விஜய், அஜித் மாறினர். 97ல் பொங்கலையொட்டி, விஜய்யின் காலமெல்லாம் காத்திருப்பேன் திரைப்படம், ஜனவரி 14 அன்று வெளியாக, அஜித்தின் நேசம் திரைப்படம் அதற்கு மறுநாள் வெளியானது. இதில் காலமெல்லாம் காத்திருப்பேன் படம் சற்றே முந்தியது.

காதலுக்கு மரியாதை vs இரட்டை ஜடை வயசு
1997ஆம் ஆண்டிலேயே டிசம்பர் மாதம் 12ஆம் தேதி அஜித்தின் இரட்டை ஜடை வயது என்ற படம் வெளியானது. அதற்கு ஒரு வாரம் கழித்து விஜய்யின் காதலுக்கு மரியாதை படம் ரிலீஸானது. இரட்டை ஜடை வயசு படத்தை விஜய்யின் காதலுக்கு மரியாதை படம் வீழ்த்தி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை ஈர்த்தது.

துள்ளாத மனமும் துள்ளும் vs உன்னைத்தேடி
1999ஆம் விஜய்யின் துள்ளாத மனமும் துள்ளும் படம் ஜனவரி 29அன்று வெளியாக, அஜித்தின் உன்னைத்தேடி படம் பிப்ரவரி 5ஆம் தேதி வெளியானது. இதில் துள்ளாத மனமும் துள்ளும் படம் உன்னைத் தேடி படத்தை துவம்சம் செய்தது.

உன்னைக்கொடு என்னைத் தருவேன் vs குஷி
எஸ்.ஜே சூர்யா இயக்கத்தில் 2000ல் வெளியான விஜய்யின் குஷி படமும், அஜித்தின் உன்னைக்கொடு என்னை தருவேன் படமும் மே 19 ஆம் தேதி ஒன்றாக வெளியானது. இதில், குஷி படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட்டாக மாறியது. உன்னைக்கொடு என்னைத் தருவேன் படம் சுமாராக ஓடியது.

தீனா vs ஃப்ரண்ட்ஸ்
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் அஜித் நடித்த தீனா படமும், விஜய் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த ஃப்ரண்ட்ஸ் படமும் 2001 பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாகின. இதில் இரண்டு படங்களுமே வெற்றிப்பெற்றன. ஆனால், ஃப்ரண்ட்ஸ் படம் மட்டும்தான் 175 நாட்களைக் கடந்து திரையரங்குகளில் ஓடியது. தீனா அஜித்தின் முக்கியமான படங்களில் ஒன்றாக அமைந்தது. தல என்கிற பட்டம் தீனா படத்தின் மூலம் நடிகர் அஜித்துக்கு கிடைத்தது.

வில்லன் vs பகவதி
2002ம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளிக்கு அஜித்தின் வில்லன் மற்றும் விஜய்யின் பகவதி படங்கள் வெளியானது. கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் நெகட்டிவ் ஷேடில் அஜித் இரட்டை வேடத்தில் நடித்த வில்லன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. விஜய்யின் பகவதி திரைப்படம் விஜய்யை ஆக்ஷன் ஹீரோவாக மாற்றினாலும் அந்த ஆண்டு அஜித் படம் தான் வசூலில் முந்தியது.

திருமலை vs ஆஞ்சநேயா
2003ஆம் ஆண்டில் விஜய்யின் திருமலை படமும் அஜித்தின் ஆஞ்சநேயா திரைப்படமும் தீபாவளியன்று வெளியானது. இதில், அஜித்தின் ஆஞ்சநேயா படம் படு தோல்வியைடைந்தது. திருமலை திரைப்படம் அந்த ஆண்டு மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தி அசால்டு காட்டியது.

ஆதி vs பரமசிவன்
அடுத்த 2 ஆண்டுகளாக விஜய்-அஜித் படம் நேருக்கு நேர் களமிறங்காத நிலையில், 2006ம் ஆண்டு விஜய்க்கு ஆதி படமும், அஜித்துக்கு பரமசிவன் படமும் பொங்கலையொட்டி வெளியானது. இதில் இரண்டு படங்களுமே படு மோசமாக தோல்வியடைந்தன.

போக்கிரி vs ஆழ்வார்
2007ம் ஆண்டில் பிரபுதேவா இயக்கத்தில் விஜய், அசின் நடித்த போக்கிரி திரைப்படம் போட்டியாக ரிலீஸ் ஆன அஜித்தின் ஆழ்வார் திரைப்படம் பெருமளவில் சொதப்பியது. அந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாகவும் பொங்கல் வின்னராகவும் மாறியது போக்கிரி.

ஜில்லா vs வீரம்
அதன் பிறகு அஜித் விஜய் படங்கள் நேரடி மோதலில் ஈடுபடுவதை தவிர்த்தன. சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான வீரம் படம் நிச்சயம் வெற்றியை கொடுக்கும் என நினைத்த அஜித் விஜய்யுடன் மோதலில் ஈடுபட்டார். விஜய்யின் ஜில்லா படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. வீரம் சற்றே ஜில்லாவை விட முந்தியது குறிப்பிடத்தக்கதுல்.

துணிவு vs வாரிசு
ஜில்லா மற்றும் வீரம் படங்களை அடுத்து விஜய் அஜித் படங்கள் மீண்டும் பல ஆண்டுகள் நேரடி மோதலை தவிர்த்தன. இந்நிலையில், துணிவு படத்தின் மீதுள்ள நம்பிக்கை காரணமாக மீண்டும் அஜித் இந்த முறை பொங்கல் போட்டியில் விஜய்யின் வாரிசு படத்துடன் மோதுகிறார். இந்த முறை யார் வெல்லப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!