Don't Miss!
- Finance
மீண்டும் இந்தியா.. டெஸ்லா-வுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் 3 மாநிலங்கள்..!
- News
பொது கழிப்பறைகளுக்குகு QR Code! சுத்தம் இல்லாமல் உள்ளதா? அப்ப உடனே நீங்க செய்ய வேண்டியது இது தான்!
- Lifestyle
கும்பத்தில் உருவாகும் லட்சுமி நாராயண யோகத்தால் பிப்ரவரியில் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்க போகுது...
- Automobiles
விலை இவ்வளவு கம்மி தானா! ஆரா ஃபேஸ்லிஃப்ட் காரை அறிமுகப்படுத்திய ஹூண்டாய்!
- Technology
Vijay Sales Mega Republic Day sale: ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவிகளை கம்மி விலையில் வாங்க இதுதான் சரியான நேரம்.!
- Sports
"3 தனித்தனி அணிகள்.. ஆனாலும் ஒரு சிக்கல்".. பிசிசிஐ திட்டம் குறித்து கபில் தேவ் அறிவுரை.. அடேங்கப்பா
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
- Travel
உலகின் 7வது பழமையான நாடு இந்தியா – முதலிடத்தில் இருப்பது இந்த நாடா?
பொங்கல் வின்னர் வாரிசு... ரியல் வின்னர் துணிவு... சபாஷ் சரியான போட்டி... ஆனா ரிசல்ட் இதுதான்
சென்னை:
2023ம்
ஆண்டு
பொங்கல்
கோலிவுட்
சினிமா
ரசிகர்களுக்கு
ரியலான
கொண்டாட்டமாக
அமைந்துள்ளது.
விஜய்யின்
வாரிசு,
அஜித்தின்
துணிவு
என
இரண்டு
படங்களும்
ஒரே
நாளில்
ரிலீஸாகி
மாஸ்
காட்டி
வருகின்றன.
இந்த
வாரம்
11ம்
தேதி
வெளியான
இரண்டு
படங்களும்
கலவையான
விமர்சனங்களுடன்
பாக்ஸ்
ஆபிஸ்
வசூலிலும்
போட்டிப்
போட்டு
வருகின்றன.
இந்நிலையில்
வாரிசு,
துணிவு
படக்குழுவினர்
தரப்பில்
இருந்து
வெளியான
போஸ்டர்கள்
ரசிகர்கள்
மத்தியில்
ட்ரெண்டாகி
வருகின்றன.
கர்ப்பத்தில்
உள்ள
வாரிசு
கூட
'ரஞ்சிதமே’
பாட்டுக்கு
டான்ஸ்
ஆடுதா?
நெகிழ்ந்து
போன
தமன்!

மீண்டும் தொடங்கிய போஸ்டர் யுத்தம்
விஜய்யின் வாரிசு திரைப்படமும் அஜித்தின் துணிவும் ஒரேநாளில் ரிலீஸாகியுள்ளது. பொங்கலை முன்னிட்டு இந்த வாரம் 11ம் தேதி வெளியான இரண்டு திரைப்படங்களையும் ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர். அஜித் - ஹெச் வினோத் மூன்றாவது முறையாகவும், விஜய் - வம்ஷி பைடிப்பள்ளி காம்போ முதன்முறையாகவும் ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்துள்ளனர். இதில் இரண்டு திரைப்படங்களுக்குமே கலவையான விமர்சனங்கள் தான் கிடைத்துள்ளன. இந்நிலையில், வாரிசு, துணிவு படக்குழுவினர் சார்பில் தனித்தனியாக வெளியான போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டாகி வருகின்றன.

பொங்கல் வின்னர் வாரிசு
வம்ஷி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் ரிலீஸான வாரிசு, ஃபேமிலி சென்டிமெண்ட் ஜானர் படமாக உருவாகியுள்ளது. விஜய்யுடன் ராஷ்மிகா, சரத்குமார், யோகி பாபு, ஷாம், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம், 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூலில் இணைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. மூன்றே நாட்களில் தரமான கலெக்ஷன் செய்துள்ளதையடுத்து, வாரிசு படத்தை ரிலீஸ் செய்த 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ், போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. "பொங்கல் வின்னர் தி பாஸ் ரிட்டர்ன்ஸ் வாரிசு" என்ற கேப்ஷனுடன் வெளியான இந்த போஸ்டரை விஜய் ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர். ஏற்கனவே மாயாஜால் மல்டிபிளக்ஸ் நிர்வாகம், வாரிசு படத்துக்கு தான் ரசிகர்களிடம் அதிக வரவேற்பு இருப்பதாக தெரிவித்திருந்தது.

ரியல் வின்னர் துணிவு
பொங்கல் வின்னர் வரிசு என்ற போஸ்டர் வெளியான சில மணி நேரங்களில், துணிவு பட தயாரிப்பாளர் போனிகபூர் ஒரு போஸ்டரை வெளியிட்டார். தி ரியல் வின்னர் துணிவு என்ற கேப்ஷனுடன் வெளியான அந்த போஸ்டரை அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். வாரிசு போஸ்டர் வெளியான உடனே அஜித்தின் துணிவு போஸ்டரும் வெளியிடப்பட்டது ரசிகர்கள் மத்தியில் விவாதமாகியுள்ளது. ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் ஆக்ஷன் ட்ரீட் கொடுத்துள்ள துணிவு பாக்ஸ் ஆபிஸில் இதுவரை 80 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதுதான் ரியல் ரிசல்ட்
வாரிசு - துணிவு இரண்டு திரைப்படங்களும் சேர்ந்து மூன்று நாட்களில் 150 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. இந்த இரண்டு படங்களும் 2023ம் ஆண்டின் தொடக்கத்தில் திரையரங்க உரிமையாளர்களுக்கு பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது. இதற்கெல்லாம் முக்கியமாக காரணமாக பார்க்கப்படுவது ரசிகர்கள் தான் என சினிமா விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். விஜய் - அஜித் இருவருமே மாஸ் ஹீரோக்களாக இருந்தாலும் அவர்களின் ரசிகர்கள் தான் ஆட்ட நாயகர்கள், அவர்கள் இல்லையென்றால் இந்த வெற்றியும் பாக்ஸ் ஆபிஸ் வசூலும் சாத்தியமே இல்லை என அவர்கள் கூறி வருகின்றனர்.