»   »  தல 57: 'ஆலுமா டோலுமா'வைத் தொடர்ந்து அஜீத்துடன் மீண்டும் கைகோர்க்கும் அனிருத்!

தல 57: 'ஆலுமா டோலுமா'வைத் தொடர்ந்து அஜீத்துடன் மீண்டும் கைகோர்க்கும் அனிருத்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வேதாளம் படத்தை தொடர்ந்து அஜீத்தின் அடுத்த படத்திற்கும் அனிருத் தான் இசையமைப்பாளர் என்று செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

வேதாளம் படத்தின் ஹிட் பாடல்கள் காரணமாக சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் தல 57 படத்தில் அனிருத்தையே இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்ய படக்குழுவினர் முடிவெடுத்துள்ளனராம்.

Ajith and Anirudh Join Hands again for Thala 57

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வேதாளம்

கடந்த தீபாவளியன்று வெளியான வேதாளம் படம் அந்த வருடத்தின் மிகப்பெரிய ஹிட் படங்களில் ஒன்றாக மாறியது.இந்த மாபெரும் ஹிட்டுக்கு படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ஆகியவையும் ஒரு முக்கிய காரணமாக அமைந்திருந்தன. குறிப்பாக வேதாளம் வெளியான திரையரங்குகளில் 'ஆலுமா டோலுமா' பாடலுக்கு ரசிகர்கள் எழுந்து நடனம் ஆடி மிகப்பெரிய வரவேற்பைக் கொடுத்தனர்.

3 வது முறையாக

வீரம், வேதாளம் படங்களைத் தொடர்ந்து அஜீத் - சிறுத்தை சிவா இருவரும் 3 வது முறையாக இந்தப் படத்தின் மூலம் இணைகின்றனர்.இதில் வீரம் 2014 ம் ஆண்டு பொங்கலுக்கும், வேதாளம் கடந்த ஆண்டு தீபாவளிக்கும் வெளியாகி வெற்றி பெற்றது.

முன்னோட்டம்

சிறுத்தை சிவா தற்போது 'தல 57' என்று அழைக்கப்படும் இப்படத்திற்கான முன்னோட்ட வேலைகளில் பிஸியாக இருக்கிறார். இப்படத்தில் நடிக்கும் நடிக, நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை தேர்வு செய்வதில் அவர் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார்.

தமன்னா, கீர்த்தி சனோன்

இந்தப் படத்தில் அஜீத் இரட்டை வேடங்களில் நடிப்பதால் நாயகிகளாக நடிக்க தமன்னா மற்றும் கீர்த்தி சனோன் இருவரிடமும் சிவா பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். தற்போதைய நிலவரப்படி கீர்த்தி சனோன் சம்மதம் தெரிவித்து விட்டாராம். ஆனால் தமன்னா தரப்பில் இருந்து இன்னும் எந்தத் தகவலும் இல்லை என்று கூறுகின்றனர்.

வீரம் படத்தின்

தமிழில் மார்க்கெட் இழந்து நின்ற தமன்னாவை தங்களது வீரம் படத்தின் மூலமாக அஜீத்- சிறுத்தை சிவா இருவரும் மீட்டெடுத்து வந்தனர். இதனால் அவர் கண்டிப்பாக தமன்னா சம்மதம் தெரிவிப்பார் என்று ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது.

பீப் பாடல்

பீப் பாடல் சர்ச்சையில் சிக்கி பெயரினை கெடுத்துக் கொண்ட அனிருத்திற்கு 'தல 57' மூலம் ஒரு பிரேக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரியளவில் வாய்ப்புகள் எதுவும் இல்லாத நிலையில் இந்தப் படம் அனிருத்திற்கு திருப்புமுனையாக அமையும், பழையபடி அவர் மீண்டும் பார்முக்குத் திரும்புவார் என்று அவரது ரசிகர்களும் நம்புகின்றனர்.

தீபாவளி

வீரம் 2014 ம் ஆண்டு பொங்கலுக்கும், வேதாளம் கடந்த ஆண்டு தீபாவளிக்கும் வெளியாகி வெற்றி பெற்றது. இதே பாணியில் தல 57 படத்தை வருகின்ற தீபாவளி தினத்தில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருக்கின்றனர். 2 படங்களிலும் செண்டிமெண்ட்டை நம்பிய சிவா இதிலும் அதனைத் தொடருவாரா? என்பது தெரியவில்லை.

English summary
Sources said After Huge Hit of Vedalam Ajith and Anirudh Ravichander set to Collaborate Again. The Official Announcement will be Released Soon

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil